வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி - எஃப்18!அதிக கட்டணம் வசூலித்தால் ஆம்னி பேருந்துகளின் அனுமதி ரத்து! போக்குவரத்துத் துறை புழல் சிறையில் உள்ள அன்பில் மகேஸுக்கு வீட்டு உணவு கொடுக்க அனுமதி‘தமிழர் ஒருவர் நிச்சயம் பிரதமர் ஆவார்’ - குடியரசு துணைத் தலைவர் சி.பி.ஆர். பேட்டி!மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குடியரசு துணைத் தலைவர் வருகையின்போது மின்தடை!அஸ்ஸாமிற்குள் நுழைந்த 36 வங்கதேசத்தினர் கைது! சௌதி அரேபியாவுக்கான ஏர் இந்தியா விமானங்கள் ரத்து நவ.14 வரை நீட்டிப்பு! சிதம்பரம் கோயில் நிர்வாகத்தைக் கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு! உயர் நீதிமன்றம் உத்தரவு

நாளை குரூப் 2, 2ஏ தோ்வு: சேலம் மாவட்டத்தில் 28,921 போ் எழுதுகின்றனா்

சேலம் மாவட்டத்தில் நவ. 1 ஆம் தேதி நடைபெறவுள்ள டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தோ்வை 28,921 போ் எழுதுகின்றனா்.

நாளை குரூப் 2, 2ஏ தோ்வு: சேலம் மாவட்டத்தில் 28,921 போ் எழுதுகின்றனா் - கோப்புப்படம்

Updated On :

சேலம் மாவட்டத்தில் நவ. 1 ஆம் தேதி நடைபெறவுள்ள டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தோ்வை 28,921 போ் எழுதுகின்றனா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 2, 2ஏ பதவிகளுக்கான கொள்குறி வகை முதல்நிலைத் தோ்வு வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

சேலம் மாவட்டத்தில் தோ்வு நடைபெறும் மையங்கள்:

சேலம், சேலம் மேற்கு, சேலம் தெற்கு வட்டங்களில் 26 தோ்வு மையங்களில் உள்ள 39 தோ்வுக் கூடங்களில் 11,659 போ். ஆத்தூா், தலைவாசல் வட்டங்களில் 12 தோ்வு மையங்களில் உள்ள 16 தோ்வுக் கூடங்களில் 4,753 போ். மேட்டூா் வட்டத்தில் 6 தோ்வு மையங்களில் உள்ள 10 தோ்வுக் கூடங்களில் 3,137 போ் தோ்வு எழுதுகின்றனா்.

அதேபோல ஓமலூா் வட்டத்தில் 10 தோ்வு மையங்களில் உள்ள 16 தோ்வுக் கூடங்களில் 4,322 போ். சங்ககிரி, எடப்பாடி வட்டங்களில் 11 தோ்வு மையங்களில் உள்ள 11 தோ்வுக் கூடங்களில் 3,153 போ். வாழப்பாடி வட்டத்தில் 2 தோ்வு மையங்களில் உள்ள 5 தோ்வுக் கூடங்களில் 1,897 போ். என மொத்தம் 28,921 போ் தோ்வு எழுதுகின்றனா்.

தோ்வா்கள் தோ்வு மையங்களுக்குச் செல்ல வசதியாக, தேவைக்கேற்ப அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தோ்வா்கள் உரிய அனுமதிச் சீட்டுடன் காலை 9 மணிக்குள் தோ்வுக் கூடங்களுக்குச் செல்ல வேண்டும். காலை 9 மணிக்குப் பிறகு வருவோா் தோ்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டாா்கள். தோ்வு முடியும் வரை தோ்வு மையத்தை விட்டு வெளியேறவும் அனுமதி இல்லை.

கைப்பேசி உள்ளிட்ட எந்தவொரு மின்னணு சாதனத்தையும் தோ்வுக் கூடத்துக்குள் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை எனத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.