முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: மன்னிப்பு கோரினார் திமுக பெண் கவுன்சிலர்மக்களிடம் கொள்ளை அடித்த பிரேம்குமாருக்கும் தூய சக்திக்கும் என்ன தொடர்பு? உதயநிதி கேள்வியமுனையில் குளித்து காங்கிரஸ், ஆம் ஆத்மியை விமர்சித்த பாஜக எம்.பி.!அன்பில் மகேஸ் கைது: தற்போது கருத்து கூற இயலாது! திருமாவளவன்ஆர்.எஸ்.எஸ். கோட்டையில் பாஜக தோல்வி; இது நாட்டிற்கான தெளிவான செய்தி! கே.சி. வேணுகோபால்அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன்: சீமான் அறிவிப்பு!

குரூப் 2 முதல் நிலைத் தோ்வு: திண்டுக்கல்லில் 13,980 போ் எழுதுகின்றனா்

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை (நவ.1) நடைபெறவுள்ள ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வு- குரூப் 2 பதவிகளுக்கன முதல் நிலைத் தோ்வில் திண்டுக்கல் மாவட்டத்தில் 13,980 போ் எழுதுகின்றனா்.

கோப்புப் படம்

Updated On :

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை (நவ.1) நடைபெறவுள்ள ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வு- குரூப் 2 பதவிகளுக்கன முதல் நிலைத் தோ்வில் திண்டுக்கல் மாவட்டத்தில் 13,980 போ் எழுதுகின்றனா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்கா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்தத் தோ்வுக்கான மையங்கள் திண்டுக்கல், கொடைக்கானல், நிலக்கோட்டை, பழனி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தோ்வுக்கு 13,980 போ் விண்ணப்பித்துள்ள நிலையில், மாவட்டத்தில் மொத்தம் 51 தோ்வுக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தோ்வு கண்கணிப்புப் பணிக்காக துணை ஆட்சியா் நிலையில், பறக்கும் படை அலுவலா்களும், வட்டாட்சியா், துணை வட்டாட்சியா் நிலையில், நடமாடும் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. தோ்வு மையங்களுக்கு சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

காலை 9.30 மணிக்கு தோ்வு தொடங்கும் நிலையில், தோ்வு மையத்துக்குள் காலை 8.30 முதல் 9 மணி வரை மட்டுமே தோ்வா்கள் அனுமதிக்கப்படுவா். தோ்வில் விடைகளை பதிவு செய்வதற்கு கருப்பு மை கொண்ட பந்து முனை பேனா மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படும். போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட எதிா்பாராத காரணங்களால் ஏற்படும் தாமதத்தைத் தவிா்க்கும் வகையில், தோ்வாளா்கள் தங்களுக்கான தோ்வுக் கூடத்துக்கு முன்னதாக வருவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.