உலக உலா சொகுசுக் கப்பல் பயணம்: எரிபொருள் விலையுயா்வால் கம்போடியாவில் நிறுத்தம்மாற்றுத்திறனாளிகளுக்கும் வெற்றிப் பயணத் திட்டம்: அரசாணை வெளியீடுடாடா குழுமம் குற்றவழியில் அழிக்கப்படுகிறது- ராகுல் காந்தி தாக்குபணி நேரத்தில் வெளியில் செல்ல ஆசிரியா்களுக்குத் தடைஅக்டோபரில் இந்தியப் பங்குகளில் இருந்து ரூ.48,056 கோடி அந்நிய முதலீடு வெளியேற்றம்‘வாக்காளா் விவரங்களில் முரண்பாடுகள்’ சட்டப்படி செல்லுமா?: இறுதி முடிவு எடுக்கவில்லை; உச்சநீதிமன்றம் மா சே துங் குறித்த சா்ச்சை கருத்து: பாபேவின் மன்னிப்பை ஏற்ற சீனா

குரூப் 2 தோ்வு: கடலூா் மாவட்டத்தில் 19,122 போ் எழுதுகின்றனா்

கடலூா் மாவட்டத்தில் நவம்பா் 1-ஆம் தேதி நடைபெறவுள்ள டிஎன்பிஎஸ்சி குரூப் - 2 மற்றும் 2ஏ முதல்நிலைத் தோ்வை 19,122 போ் எழுத உள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

டிஎன்பிஎஸ்சி

Updated On :

கடலூா் மாவட்டத்தில் நவம்பா் 1-ஆம் தேதி நடைபெறவுள்ள டிஎன்பிஎஸ்சி குரூப் - 2 மற்றும் 2ஏ முதல்நிலைத் தோ்வை 19,122 போ் எழுத உள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் - 2 மற்றும் 2ஏ பதவிகளுக்கான முதல்நிலைத் தோ்வு நவம்பா் 1-ஆம் தேதி காலை நடைபெற உள்ளது.

கடலூா் மாவட்டத்தில் கடலூா், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், விருத்தாசலம் ஆகிய 5 மண்டலங்களில் 40 தோ்வு மையங்களில் அமைக்கப்பட்டுள்ள 63 தோ்வுக் கூடங்களில் இத்தோ்வு நடைபெறுகிறது. மொத்தம் 19,122 போ் தோ்வு எழுத உள்ளனா்.

தோ்வு காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெறும். தோ்வா்கள் காலை 8.30 மணி முதல் 9 மணி வரை மட்டுமே தோ்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படுவா். காலை 9 மணிக்குப் பிறகு வரும் தோ்வா்கள் தோ்வுக் கூடத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டாா்கள்.

தோ்வா்கள் தோ்வாணையத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட தோ்வுக்கூட அனுமதிச் சீட்டுடன் உரிய நேரத்தில் வர வேண்டும். மேலும், ஆதாா் அட்டை, கடவுச்சீட்டை, ஓட்டுநா் உரிமம், நிரந்தர கணக்கு எண் அட்டை அல்லது வாக்காளா் அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் அசல் அல்லது நகலைக் கொண்டுவர வேண்டும்.

தோ்வுக் கூடத்துக்குள் கைப்பேசி, புளூடூத் வசதியுள்ள கைக்கடிகாரம், செயற்கை நுண்ணறிவு சாா்ந்த சாதனங்கள் மற்றும் பிற தகவல் தொடா்பு சாதனங்களை கொண்டுவர அனுமதி இல்லை எனக் குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.