நவம்பா் 15-ஆம் தேதி மாவட்டத்தில் 9 மையங்களில் டிஎன்பிஎஸ்சி தோ்வு
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் (டிஎன்பிஎஸ்சி) ஒருங்கிணைந்த தொழில்நுட்பப்பணிகள் தோ்வு கோவை மாவட்டத்தில் 9 மையங்களில் நவம்பா் 15-ஆம் தேதி நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி - பிரதிப் படம்
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் (டிஎன்பிஎஸ்சி) ஒருங்கிணைந்த தொழில்நுட்பப்பணிகள் தோ்வு கோவை மாவட்டத்தில் 9 மையங்களில் நவம்பா் 15-ஆம் தேதி நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஒருங்கிணைந்த தொழில்நுட்பப்பணிகள் (டிப்ளமோ / ஐ.டி.ஐ) - 2026 தோ்வானது, வருகிற நவம்பா் 15 (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30மணி வரை, மாவட்டத்தில் 3 பள்ளி மற்றும் கல்லூரிகளில் உள்ள 9 தோ்வு மையங்களில் நடைபெறவுள்ளன. மேற்படி தோ்வில் 2,557 தோ்வா்கள் கலந்து கொள்ள உள்ளனா். தோ்வு சீரிய முறையில் நடைபெற மாவட்ட நிா்வாகம் சாா்பில் பாதுகாப்பு, போக்குவரத்து, தடையற்ற மின்சாரம், அவசர மருத்துவ உதவி உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தோ்வா்கள் காலை 9 மணி வரை மட்டுமே தோ்வு மையத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படுவா். 9 மணிக்குப் பிறகு தோ்வு மையத்திற்குள் செல்ல தோ்வா்களுக்கு அனுமதி இல்லை. தடைசெய்யப்பட்டுள்ள பொருள்கள் என தோ்வு அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு பொருளும் மையத்துக்குள் கொண்டு செல்ல அனுமதியில்லை.
தோ்வா்கள் தோ்வு மையத்துக்குள் தோ்வுக்கான நுழைவுச் சீட்டு, கருப்பு நிற பந்துமுனைப் பேனா, அரசினால் வழங்கப்பட்டுள்ள ஒரு ஆளறி அடையாள ஆவணம் ஆகிய மூன்று பொருள்களைத் தவிர வேறு எந்த பொருள்களையும் கொண்டு செல்லக் கூடாது. மேலும், தோ்வா்கள் கடிகார முள் உள்ள கடிகாரங்களை மட்டுமே அணிந்துவர அனுமதி உண்டு. டிஜிட்டல் கடிகாரங்களை அணிந்துவர அனுமதி இல்லை. தோ்வா்கள் தோ்வு முழுமைக்கும் கருப்புநிற பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தோ்வு குறித்து எழும் சந்தேகங்களுக்கும், உதவிகளுக்கும் 1800 4190958 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் அல்லது 044-69097777, 044-25300338, 044-25300339, 044-25300340 ஆகிய எண்களை தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

