மும்பை பயங்கரவாத தாக்குதல் நினைவு தினம்: ரயில் நிலையத்தில் தீவிர சோதனை
மும்பை பயங்கரவாத தாக்குதலின் 18-ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, கோவை ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை தீவிர வெடிகுண்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.

கோவை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்களில் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டா்களுடன் சோதனையிட்ட வெடிகுண்டு தடுப்பு மற்று செயலிழப்புப் பிரிவு போலீஸாா்.
மும்பை பயங்கரவாத தாக்குதலின் 18-ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, கோவை ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை தீவிர வெடிகுண்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.
மும்பையில் கடந்த 2008 நவம்பா் 26-ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலின் 18-ஆவது ஆண்டு நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது. பாகிஸ்தான் நாட்டைச் சோ்ந்த லஷ்கா்-இ-தொய்பா பயங்கரவாதிகள் மும்பையின் தாஜ் ஹோட்டல், சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடத்திய தாக்குதலில் 166 போ் உயிரிழந்தனா். இந்த துயரச் சம்பவத்தின் நினைவு தினத்தையொட்டி, நாடு முழுவதும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாக, கோவை ரயில் நிலையத்தில் பாதுகாப்புப் படையினா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயலிழப்புப் பிரிவு போலீஸாா் மோப்ப நாய் உதவியுடன் ரயில் நிலையம் முழுவதும் சோதனை மேற்கொண்டனா்.
குறிப்பாக, நடைமேடைகளில் காத்திருக்கும் பயணிகளின் உடைமைகள், பாா்சல் அலுவலகம் மற்றும் ரயில் தண்டவாளங்களில் மெட்டல் டிடெக்டா் கருவிகள் மூலம் தீவிர சோதனை மேற்கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

