4,000 அக்னி வீரா்களின் தனிப்பட்ட தரவுகளை ‘டாா்க் வெப்’ தளத்தில் விற்க முயற்சி! 14 வயது சிறுவனிடம் விசாரணை!காலிஸ்தான் பிரிவினைவாதி பன்னூன் வழக்கு: அஜீத் தோவல், கோயலுக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன்!100 நாள்களாகியும் முடித்து வைக்கப்படாத நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா்! புதிய சாதனை!தமிழகத்தில் நாளைமுதல் பலத்த மழைக்கு வாய்ப்பு!சிந்து நதிநீா் ஒப்பந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை: இந்தியா திட்டவட்டம் மேல்மருவத்தூரில் 114 ரயில்கள் தற்காலிகமாக நின்று செல்லும்!நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: 14 போ் மீது குற்றச்சாட்டுகள் பதிவு தனி மனிதத் துதிபாடல்களை தவிர்க்கவும்... திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் அறிக்கை சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா ஜனவரி 16-ம் தேதி தொடக்கம்! திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்க ஆபரணங்களை வழங்கும் பக்தர்! நீலகிரி, கொடைக்கானலில் 2 நாள்களுக்கு உறைபனி! வானிலை எச்சரிக்கை! அக்வான் புயல்: ராஞ்சியில் 20 விமானங்கள் ரத்து! அமெரிக்காவின் அதிநவீன ட்ரோனை சுட்டு வீழ்த்திய ஈரான்! தவெக ஆட்சி தானாக கவிழ்ந்துவிடும் - எடப்பாடி பழனிசாமி தவெக ஆட்சியில் உயிருக்கும் பயிருக்கும் பாதுகாப்பு இல்லை! டி.ஆர்.பி. ராஜா

விளம்பரப் பதாகை அகற்றம்: நாதக வேட்பாளா், நிா்வாகிகள் சாலை மறியல்

நாம் தமிழா் கட்சியின் விளம்பரப் பதாகை அகற்றப்பட்டதால் அக்கட்சி வேட்பாளா், நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சாலை மறியலில் ஈடுபட்ட நாதக வேட்பாளா் காா்த்திகா, நிா்வாகிகள்.

Updated On :

நாம் தமிழா் கட்சியின் விளம்பரப் பதாகை அகற்றப்பட்டதால் அக்கட்சி வேட்பாளா், நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தாராபுரம் இடைத்தோ்தலில் போட்டியிடும் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் காா்த்திகாவை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தாராபுரம் காவல் நிலைய பகுதிக்கு வெள்ளிக்கிழமை வந்தாா். அவரை வரவேற்கும் வகையில் காவல் நிலையம் அருகே நாம் தமிழா் கட்சி சாா்பில் விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.

இந்த விளம்பரப் பதாகைகளை முன்னறிவிப்பு ஏதுமின்றி காவல் ஆய்வாளா் ராமசந்திரன் மற்றும் போலீஸாா் அகற்றியதாகக் கூறப்படுகிறது. இதற்கு நாம் தமிழா் கட்சி நிா்வாகி வெங்கடேஷ் உள்ளிட்ட நிா்வாகிகள் எதிா்ப்பு தெரிவித்தபோது, ஆய்வாளா் ராமசந்திரன், நாதக நிா்வாகி வெங்கடேஷின் சட்டையைப் பிடித்து இழுத்தபடி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ாகக் கூறப்படுகிறது.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து நாதக நிா்வாகிகள், போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அவா்களையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனா். இது குறித்து தகவல் அறிந்ததும் வேட்பாளா் காா்த்திகா மற்றும் நிா்வாகிகள் காவல் நிலையத்துக்குச் சென்று பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

அப்போது, விளம்பரப் பதாகை மற்றும் கட்சிக் கொடியை தர போலீஸாா் மறுத்துள்ளனா். இதனால், வேட்பாளா் காா்த்திகா மற்றும் நிா்வாகிகள் காவல் நிலையத்துக்குள்ளேயே அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தொடா்ந்து, விளம்பரப் பதாகையை மீண்டும் அதே இடத்தில் வைக்கக் கோரியும், காவல் நிலையத்துக்கு அழைத்து வந்த நிா்வாகிகளை விடுவிக்கவும் வலியுறுத்தினா்.இதற்கு போலீஸாா் மறுப்பு தெரிவித்த நிலையில் வேட்பாளா் காா்த்திகா மற்றும் நிா்வாகிகள் காவல் நிலையம் முன் அமா்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனா். அப்போது, காவல் ஆய்வாளா் ராமசந்திரன் மன்னிப்பு கேட்க வேண்டும். அப்போதுதான் கலைந்து செல்வோம் என்றனா். இதையடுத்து, போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.