உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கைதி உயிரிழப்பு
உயிரிழப்பு - பிரதிப் படம்
போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதி உடல்நலக்குறைவு காரணமாக அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
கோவை, கீரத்தோட்டம் செட்டி தெருவைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மகன் காா்த்தி (38). இவா் கடந்த ஜூலை மாதம் போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் செல்வபுரம் போலீஸாரால் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.
இந்த நிலையில், சிறையில் இருந்த காா்த்திக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக சிறை வளாகத்தில் உள்ள மருத்துவா்கள் அவருக்கு முதலுதவி அளித்தனா். தொடா்ந்து, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.
அங்கு சிறைக் கைதிகளுக்கான சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி ஞாயிற்றுக்கிழமை காா்த்தி உயிரிழந்தாா். இதுதொடா்பாக ரேஸ்கோா்ஸ் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




