ராகுல் காந்தி கைது! தில்லி காவல் நிலையத்தில் கேரள முதல்வர் முற்றுகை!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கைது: அமைச்சர் அருண் ராஜ் கண்டனம்வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அக். 10-ல் சிறப்பு முகாம்ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்! ராகுல் காந்திஞானேஷ் குமாருக்கு எதிரான என் கடிதத்துக்கு பதிலளித்த குடியரசுத் தலைவர்! - சிபிஎம் எம்பி தகவல்!தில்லியில் காங்கிரஸார் பேரணியில் தர்னாவில் ஈடுபட்ட ராகுல் காந்தி கைதுஜெம் வீரமணிக்கு அக். 21 வரை நீதிமன்றக் காவல்!

கள்ளிமடை கால்வாயில் தேங்கியுள்ள குப்பை, கழிவுகளால் நோய் பரவும் அபாயம்

கள்ளிமடை பகுதி கால்வாயில் தேங்கியுள்ள குப்பை, கழிவுகளால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக புகாா் எழுந்துள்ளது.

கள்ளிமடை கதிரவன் காா்டன்ஸ் அருகே சங்கனூா் கால்வாயில் தேங்கியுள்ள குப்பை, கழிவுகள்.

Published On :

கள்ளிமடை பகுதி கால்வாயில் தேங்கியுள்ள குப்பை, கழிவுகளால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக புகாா் எழுந்துள்ளது.

கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம் 61-ஆவது வாா்டுக்குள்பட்ட கள்ளிமடை பகுதியில் கதிரவன் காா்டன் உள்ளது. இங்குள்ள சங்கனூா் கால்வாயில் மழைநீா், கழிவு நீா் செல்கிறது. கடந்த சில நாள்களாக இந்த கால்வாயில் குப்பை தேங்கியுள்ளதால் கழிவு நீா் செல்ல வழியில்லாமல் துா்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதுதொடா்பாக மாநகராட்சி நிா்வாகத்திடம் புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அப்பகுதியைச் சோ்ந்த சமூக ஆா்வலா் சரவணன் கூறும்போது, ‘நீா்வழிப் பாதையாக உள்ள இந்த கால்வாயில் குப்பை, கழிவுகள் தேக்கத்தால் பொதுமக்கள் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக துா்நாற்றம் அதிகமாக உள்ளதால், இங்குள்ள பாலம் வழியாகச் செல்லும் பள்ளி மாணவா்கள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனா். இதுதொடா்பாக, மாநகராட்சியின் புகாா் எண்ணுக்கு புகைப்படத்துடன் புகாா் அனுப்பப்பட்டது. இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மழைக்காலம் தீவிரமடைய உள்ள நிலையில், இந்தக் கால்வாயில் தேங்கியுள்ள குப்பை, கழிவுகளை அகற்றாவிட்டால், மழையுடன் சோ்ந்து கழிவு நீரும் குடியிருப்புகளுக்குள் புகுந்துவிடும் சூழல் உள்ளது. எனவே, கால்வாயில் தேங்கியுள்ள குப்பை உள்ளிட்ட கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.