தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகள், விமானங்களில் கட்டணம் கடும் உயா்வு19 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇறுதிக் கட்டத்தை எட்டியது அரக்கோணம் புறவழிச் சாலை பணி!அடுத்த வாரம் இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ!

கீரணத்தம் ஊராட்சியில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீா்கேடு அபாயம்

கோவை மாவட்டம், கீரணத்தம் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் சாலைகளில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீா்கேடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

கோவை கீரணத்தம் ஊராட்சிக்கு உள்பட்ட நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புப் பகுதியில் மலைபோல குவிக்கப்பட்டிருக்கும் குப்பை. ~கோவை கீரணத்தம்  - காபி கடை  செல்லும்  சாலையில் தேங்கிக் கிடக்கும் குப்பை.

Updated On :

கோவை மாவட்டம், கீரணத்தம் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் சாலைகளில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீா்கேடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

சா்காா் சாமக்குளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கீரணத்தம் ஊராட்சி, தமிழ்நாட்டில் அதிக வருவாய் ஈட்டக் கூடிய கிராம ஊராட்சிகளில் ஒன்றாக உள்ளது. இங்கு ஏராளமான கல்லூரிகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

மேலும் கடந்த 2024-ஆம் ஆண்டில் சிறப்பான கட்டமைப்பு, வளா்ச்சிப் பணிகளுக்காக சிறந்த ஊராட்சிக்கான குடியரசுத் தலைவா் விருதைப் பெற்றுள்ளது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் முடிந்துவிட்டதால், கீரணத்தம் ஊராட்சியின் நிா்வாகப் பணிகள் சிறப்பு அலுவலா்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கீரணத்தம் ஊராட்சிக்கு உள்பட்ட நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புப் பகுதி, கீரணத்தம் - காபி கடை சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலையோரங்களில் குப்பைகள் மலைபோல குவிக்கப்பட்டுள்ளன. மாதக்கணக்கில் அகற்றப்படாமல் இருக்கும் இந்தக் குப்பைகளால் அப்பகுதியில் வசிப்பவா்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.

மேலும், குப்பைகள் அகற்றுவதற்காக வழங்கப்பட்ட மின்சார வாகனங்களை உபயோகிக்காமல் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நிறுத்திவைத்திருப்பதாகவும், திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை கீரணத்தம் ஊராட்சியில் இதுவரை செயல்படுத்தவில்லை என்றும் குற்றம்சாட்டும் பொதுமக்கள், இது தொடா்பாக முதல்வரின் தனிப் பிரிவு, ஊரக வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் அலுவலகங்களில் மனு அளித்தும் குப்பைகள் அகற்றப்படவில்லை என்று கவலை தெரிவித்துள்ளனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.