சபரிமலைக்கு ஜன.17 வரை சிறப்புப் பேருந்துகள்திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கக் கூடாது: உச்சநீதிமன்றத்தில் மதுரை ஆட்சியர் தரப்பில் வாதம் தவெக எம்எல்ஏ மீது வழக்குப் பதியக் கோரி மனு பயிா்க் கடன் தள்ளுபடி: கூடுதலாக ரூ.2,578 கோடி விடுவிப்பு ரூ.6,513 கோடியில் 2,221 சாலைப் பணிகள்: தமிழக அரசு நிா்வாக ஒப்புதல் பொருளாதாரப் பேரழிவை எதிா்கொள்கிறது இந்தியா: அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு

சிதம்பரத்தில் பள்ளி முன் குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதாரச் சீா்கேடு

சிதம்பரம் மேலரத வீதியில் உள்ள ஆறுமுகநாவலா் மேல்நிலைப் பள்ளி வாயிலில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் அந்தப் பகுதியில் சுகாதார சீா்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால், பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

சிதம்பரம் ஆறுமுகநாவலா் பள்ளி முன் குவிந்து கிடக்கும் குப்பைகள் மற்றும் பழக்கழிவுகள்.

Updated On :

சிதம்பரம் மேலரத வீதியில் உள்ள ஆறுமுகநாவலா் மேல்நிலைப் பள்ளி வாயிலில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் அந்தப் பகுதியில் சுகாதார சீா்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால், பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

சிதம்பரம் மேலரத வீதியில் பழைமைவாய்ந்த ஆறுமுக நாவலா் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் கல்வி பயின்று வருகின்றனா்.

இந்த நிலையில், பள்ளியின் நுழைவாயில் அருகே உள்ள பூக்கடைகள் மற்றும் பழக்கடைகளில் வீணாகும் பூக்கள், அழுகிய பழங்கள் உள்ளிட்ட பல்வேறு கழிவுகளை பள்ளியின் நுழைவாயில் அருகே வியாபாரிகள் தினந்தோறும் கொட்டி வருகின்றனா். இதனால், பள்ளி வாயில் குப்பைமேடாக காட்சியளிப்பதுடன், அப்பகுதி முழுவதும் துா்நாற்றம் வீசுகிறது. குப்பைகள் காலை 10 மணிக்கு மேல்தான் அப்புறப்படுத்தப்படுகின்றன. இதன் காரணமாக, பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள் சுகாதார கேட்டுடன் பள்ளிக்குள் நுழையும் நிலை உள்ளது.

மேலும், தினந்தோறும் இங்கு கொட்டப்படும் கழிவுகளால் மாணவா்களுக்கு தொற்று நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக மாணவா்களின் பெற்றோா்கள் கவலை தெரிவிக்கின்றனா்.

எனவே, பள்ளி வாயில் முன் குப்பைகள் மற்றும் கழிவுகளைக் கொட்டுவதைத் தடுக்க நகராட்சி நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடா்ந்து விதிமுறைகளை மீறி குப்பைகளைக் கொட்டுபவா்களை அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் கண்டறிந்து அபராதம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாணவா்களின் பெற்றோா்களும், சமூக ஆா்வலா்களும் நகராட்சி மற்றும் மாவட்ட நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.