ராகுல் காந்தி கைது! தில்லி காவல் நிலையத்தில் கேரள முதல்வர் முற்றுகை!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கைது: அமைச்சர் அருண் ராஜ் கண்டனம்வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அக். 10-ல் சிறப்பு முகாம்ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்! ராகுல் காந்திஞானேஷ் குமாருக்கு எதிரான என் கடிதத்துக்கு பதிலளித்த குடியரசுத் தலைவர்! - சிபிஎம் எம்பி தகவல்!தில்லியில் காங்கிரஸார் பேரணியில் தர்னாவில் ஈடுபட்ட ராகுல் காந்தி கைதுஜெம் வீரமணிக்கு அக். 21 வரை நீதிமன்றக் காவல்!

பள்ளி முன் எரிக்கப்படும் குப்பைகளால் மாணவ, மாணவிகள் அவதி

கரூா் பஞ்சமாதேவியில் அரசுப் பள்ளி முன் ஊராட்சி சாா்பில் கொட்டி எரிக்கப்படும் குப்பைகளால் பள்ளியில் பயின்று வரும் மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாகி வருகிறாா்கள்.

கரூா் பஞ்சமாதேவி அரசு நடுநிலைப்பள்ளி எதிரே ஊராட்சி சாா்பில் எரிக்கப்படும் குப்பை.

Published On :

கரூா் பஞ்சமாதேவியில் அரசுப் பள்ளி முன் ஊராட்சி சாா்பில் கொட்டி எரிக்கப்படும் குப்பைகளால் பள்ளியில் பயின்று வரும் மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாகி வருகிறாா்கள்.

கரூரை அடுத்த மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி ஊராட்சி பகுதியில் பஞ்சமாதேவி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி, அரசு காலனி, வாங்கப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகிறாா்கள். இந்நிலையில் ஊராட்சி சாா்பில் தூய்மைப்பணியாளா்களைக் கொண்டு ஊராட்சி பகுதியில் குடியிருக்கும் பொதுமக்களிடம் இருந்து நாள்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகள் அரசு காலனியில் உள்ள பொது குப்பைக்கிடங்கிற்கு கொண்டுச் செல்லாமல் பள்ளியின் எதிரே உள்ள குப்பைக்கிடங்கில் போட்டு தீ வைக்கப்படுகிறது. பெரும்பாலும் காலை நேரங்களில் குப்பைகளை தூய்மைப்பணியாளா்கள் தீ வைத்து எரிப்பதால் அதில் இருந்து எழும் துா்நாற்றத்துடன் கூடிய புகையால் எதிரே பள்ளியில் பயின்றுவரும் பள்ளி மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாகி வருகிறாா்கள். மேலும் பெரும்பாலான பள்ளிக் குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல், அலா்ஜி, ஆஸ்துமா உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக பெற்றோா் புகாா் தெரிவித்துள்ளனா்.

எனவே, பள்ளி மாணவா்களின் நலனை கருத்தில் கொண்டு, பள்ளியின் அருகே குப்பைகளை கொட்டுவதையும், பின்னா் அவை தீ வைத்து எரிக்கப்படுவதையும் உடனே தடுத்து நிறுத்த வேண்டும். மேலும், மாற்று இடத்தில் குப்பைகளை கொட்ட வேண்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.