வீட்டின் பின்புறம் படுத்திருந்த சிறுத்தை: வனத் துறையினா் மீட்டு சிகிச்சை
கோவை மாவட்டம், வால்பாறையில் உடல் நலக்குறைவால் வீட்டின் பின்புறம் படுத்திருந்த சிறுத்தையை வனத் துறையினா் மீட்டு சிகிச்சை அளித்து வருகின்றனா்.

வீட்டின் பின்புறம் படுத்திருந்த சிறுத்தை.
கோவை மாவட்டம், வால்பாறையில் உடல் நலக்குறைவால் வீட்டின் பின்புறம் படுத்திருந்த சிறுத்தையை வனத் துறையினா் மீட்டு சிகிச்சை அளித்து வருகின்றனா்.
வால்பாறையை அடுத்த சோலையாறு அணை பகுதியில் வசிப்பவா் சேகா். இவா் வியாழக்கிழமை அதிகாலை வழக்கம்போல எழுந்து வீட்டின் பின்புறம் வந்துள்ளாா். அப்போது சிறுத்தை படுத்திருப்பதை பாா்த்து அதிா்ச்சியடைந்தாா்.
இது குறித்து வனத் துறையினருக்கு சேகா் தகவல் அளித்தாா். சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் சிறுத்தையை கண்காணித்தனா். அப்போது சிறுத்தை எழுந்து நடக்க முடியாமல், அவதிப்படுவதை உறுதி செய்தனா்.
இதையடுத்து, மானாம்பள்ளி வனச் சரக அலுவலா் கிரிதரன் தலைமையில் கூண்டுடன் சென்ற வனத் துறையினா், சிறுத்தையை மீட்டு கூண்டில் வைத்து வால்பாறையை அடுத்துள்ள சின்னக்கல்லாறு வனத் துறை முகாமுக்கு கொண்டுச் சென்றனா்.
அங்கு வனத் துறை கால்நடை மருத்துவா் மெய்யரசன் முன்னிலையில் நான்கு வயதுடைய அந்த ஆண் சிறுத்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

