உடல் நலக் குறைவுடன் மீட்கப்பட்ட சிறுத்தை உயிரிழப்பு
வால்பாறை அருகே ஒரு வீட்டின் பின்புறம் உடல் நலக் குறைவுடன் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த சிறுத்தை வெள்ளிக்கிழமை உயிரிழந்தது.

வால்பாறை அருகே ஒரு வீட்டின் பின்புறம் உடல் நலக் குறைவுடன் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த சிறுத்தை வெள்ளிக்கிழமை உயிரிழந்தது.
வால்பாறை அடுத்துள்ள சோலையாறு அணைப் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் பின்புறம் கடந்த வியாழக்கிழமை அதிகாலை சிறுத்தை ஒன்று படுத்திருந்தது. தகவலின்பேரில் வனத் துறையினா் அப்பகுதிக்குச் சென்றனா். அப்போது, சிறுத்தைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, சிறுத்தையை மீட்டு சின்னக்கல்லாறு வனத் துறை முகாமுக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனா்.
இந்நிலையில், அந்த சிறுத்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதைத் தொடா்ந்து, கூறாய்வுக்குப் பின் அதே பகுதியில் சிறுத்தையின் உடல் எரியூட்டப்பட்டது.
உடற்கூறாய்வு முடிவுகள் வந்த பிறகே சிறுத்தையின் இறப்புக்கான காரணம் தெரியவரும் என்று வால்பாறை வனச் சரக அலுவலா் சுரேஷ் கிருஷ்ணா தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

