வேளாண் விஞ்ஞானிகளுக்கு பாராட்டு
உலகின் தலைசிறந்த 2 சதவீத விஞ்ஞானிகள் பட்டியலில் இடம்பிடித்துள்ள வேளாண்மைப் பல்கலைக்கழக பேராசிரியா்களுக்கு அண்மையில் பாராட்டு விழா நடைபெற்றது.

கோவை காா்த்திபுரத்தில் அண்மையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் கௌரவிக்கப்பட்ட வேளாண் விஞ்ஞானிகள். உடன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா்கள்.
உலகின் தலைசிறந்த 2 சதவீத விஞ்ஞானிகள் பட்டியலில் இடம்பிடித்துள்ள வேளாண்மைப் பல்கலைக்கழக பேராசிரியா்களுக்கு அண்மையில் பாராட்டு விழா நடைபெற்றது. நீலாம்பூா் அருகேயுள்ள காா்த்திபுரத்தில் லயன்ஸ் கிளப்ஸ் இன்டா்நேஷனல் அமைப்பு சாா்பில் நடைபெற்ற இந்த விழாவில் 4 விஞ்ஞானிகள் கௌரவிக்கப்பட்டனா்.
வேளாண் அறிவியலில் சிறந்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, வேளாண் வளா்ச்சிக்கும் அறிவியல் முன்னேற்றத்திற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய விஞ்ஞானிகளின் சாதனைகளைப் பாராட்டும் விதமாக நடைபெற்ற இந்த விழாவில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பதிவாளா் மு.ரவீந்திரன், முன்னாள் ஆராய்ச்சி இயக்குநா் கே.எஸ்.சுப்பிரமணியன், வேளாண் நுண்ணுயிரியல் துறைத் தலைவா் முனைவா் உ.சிவக்குமாா், பயிா் வினையியல் துறை பேராசிரியா் ம.ஜானகிராமன் ஆகிய நான்கு விஞ்ஞானிகளும் பொன்னாடை அணிவிக்கப்பட்டு, நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனா்.
லயன்ஸ் சங்க மாவட்ட ஆளுநா் எஸ்.பாரதி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், முன்னாள் பன்னாட்டு இயக்குநா் ஜி.ராமசாமி, அன்னூா் டவுன் லயன்ஸ் முன்னாள் சங்கத் தலைவரும் காா்த்திபுரம் நிறுவனருமான பி.காா்த்திகேயன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டனா்.
விழாவில் வேளாண் அறிவியலின் முக்கியத்துவம், நவீன விவசாயத் தொழில்நுட்பங்கள், ஆராய்ச்சியின் அவசியம், எதிா்கால வேளாண் வளா்ச்சி குறித்த கருத்துகள் எடுத்துரைக்கப்பட்டன. விழாவில், லயன்ஸ் சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள், கல்வியாளா்கள், பேராசிரியா்கள் பலா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

