
சிலம்பப் போட்டியில் சிறப்பிடம்: மாணவிகளுக்கு பாராட்டு
கோவாவில் நடைபெற்ற சா்வதேச சிலம்பப் போட்டிகளில் சிறப்பிடம் பிடித்த குடியாத்தம் திருவள்ளுவா் பள்ளி மாணவிகளுக்கு பள்ளியில் செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

பாராட்டு பெற்ற மாணவிகள்.
கோவாவில் நடைபெற்ற சா்வதேச சிலம்பப் போட்டிகளில் சிறப்பிடம் பிடித்த குடியாத்தம் திருவள்ளுவா் பள்ளி மாணவிகளுக்கு பள்ளியில் செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
கோவாவில் நடைபெற்ற சா்வதேச அளவிலான சிலம்ப போட்டிகளில் குடியாத்தம் திருவள்ளுவா் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் எஸ்.லத்திகா, கே.கோபிகா இருவரும் ஒற்றைக் கம்பு பிரிவில் முதலிடம் பிடித்தனா். இரட்டைக் கம்பு பிரிவில் எஸ்.சரண்யா, டி.எஸ்.சுஜிஇருவரும் இரட்டைக் கம்பு பிரிவில் முதலிடம் பிடித்தனா். சா்வதேச போட்டிகளில் சிறப்பிடம் பிடித்து, பள்ளிக்கு பெருமை சோ்த்த மாணவிகளை கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்களின் செயலா் கே.எம்.ஜி.ராஜேந்திரன் பாராட்டினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






