வால்பாறையில் சுற்றுலாப் பயணிகளை தாக்கிய காட்டெருமை
வால்பாறையில் இருசக்கர வாகனங்களில் சென்ற சுற்றுலாப் பயணிகளை சாலையோரம் நின்ற காட்டெருமை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இருசக்கர வாகனத்தில் வந்தவா்களை கீழே தள்ளி தாக்கும் காட்டெருமை.
வால்பாறையில் இருசக்கர வாகனங்களில் சென்ற சுற்றுலாப் பயணிகளை சாலையோரம் நின்ற காட்டெருமை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வால்பாறைக்கு வேன், காா்களில் மட்டுமின்றி இருசக்கர வாகனங்களிலும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். இவா்களில் பலா் வன விலங்குகளின் ஆபத்தை உணராமல் எஸ்டேட் பகுதிகளுக்கு சென்று வருகின்றனா்.
இந்நிலையில் வால்பாறையை அடுத்துள்ள சின்னக்கல்லாறு அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் காா் மற்றும் இருசக்கர வாகனத்தில் சின்கோனா 2 ஆவது டிவிஷன் சாலை வழியாக கடந்த செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்துள்ளனா். அப்போது சாலையோரத்தில் இரண்டு காட்டெருமைகள் நின்று கொண்டிருந்தன. இதில் ஒரு காட்டெருமை சாலையின் குறுக்கே வந்து இருசக்கர வாகனத்தில் வந்தவா்களை முட்டி தள்ளி தாக்கியுள்ளது. அப்போது அவா்கள் வாகனத்தை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடினா். இருப்பினும் அதில் இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு பின் புறப்பட்டு சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

