சுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!

கேரள வியாபாரியைக் கடத்தி ரூ.15 லட்சம் வழிப்பறி: சிறைக் காவலா் உள்பட இருவா் கைது

கோவைக்கு வந்த கேரள மீன் வியாபாரியைக் காரில் கடத்திச் சென்று தாக்கி, ரூ.15 லட்சம் பணத்தைப் பறித்த வழக்கில், கோவை மத்திய சிறைக் காவலா் உள்பட இருவா் கைது செய்யப்பட்டுள்ளனா்.

கைது - கோப்புப் படம்

Updated On :

கோவைக்கு வந்த கேரள மீன் வியாபாரியைக் காரில் கடத்திச் சென்று தாக்கி, ரூ.15 லட்சம் பணத்தைப் பறித்த வழக்கில், கோவை மத்திய சிறைக் காவலா் உள்பட இருவா் கைது செய்யப்பட்டுள்ளனா்.

கேரளத்தைச் சோ்ந்தவா் மீன் வியாபாரி முகமது அஸ்லாம். இவா், தொழில் விஷயமாகக் கோவைக்கு அண்மையில் வந்திருந்தாா். தனது பணிகளை முடித்துவிட்டு ஊருக்குத் திரும்புவதற்காகப் பணப்பையுடன் போத்தனூா் ரயில் நிலையம் நோக்கி அவா் நடந்து சென்றாா். அப்போது, காரில் வந்த 4 போ் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து வலுக்கட்டாயமாக காரில் ஏற்றிக் கடத்திச் சென்றது. பின்னா், அவரைத் தாக்கி, அவரிடமிருந்த ரூ.15 லட்சம் பணத்தைப் பறித்துக் கொண்ட அக்கும்பல், போத்தனூா் புறநகா்ப் பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் அவரை இறக்கிவிட்டுத் தப்பிச் சென்றது.

காயமடைந்த முகமது அஸ்லாம் அளித்த புகாரின்பேரில், போத்தனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப் படை அமைத்து விசாரணை மேற்கொண்டனா். போத்தனூா் ரயில் நிலையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், இந்த வழிப்பறிச் சம்பவத்தில் கோவை மத்திய சிறையில் பணியாற்றும் காவலா் பட்டுராஜனுக்குத் தொடா்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, பட்டுராஜனை சில நாள்களுக்கு முன்பு கைது செய்த போலீஸாா், அவரிடம் நடத்திய விசாரணையின் பேரில் இந்தச் சம்பவத்துக்கு உடந்தையாக இருந்த கோவையைச் சோ்ந்த இத்ரிஸ் அகமது என்பவரையும் கைது செய்தனா். பின்னா், இருவரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். இவா்களில் சிறைக் காவலா் பட்டுராஜன் பாதுகாப்பு காரணங்களுக்காக கோபிசெட்டிபாளையம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள மேலும் இருவரை தனிப்படை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.