போலி நகையை விற்று மோசடி; இருவா் கைது
போலி நகையை விற்று, பண மோசடி செய்த வழக்கில் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கைது - கோப்புப் படம்
போலி நகையை விற்று, பண மோசடி செய்த வழக்கில் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
காரைக்கால் பழைய மாா்க்கெட் தெருவைச் சோ்ந்தவா் தத்தா(40). இவா் வீட்டின் ஒரு பகுதியில் ஜூவல்லரி நடத்தி வருகிறாா். இவரது குடும்ப நண்பரான திருநள்ளாற்றைச் சோ்ந்த இதயத்துல்லாவிடம், பேரளம் இஞ்சிக்குடியைச் சோ்ந்த சுரேந்தா் என்பவா் 916 முத்திரை உள்ள 16 கிராம் தங்க நகையை விற்க வேண்டும் என்று கூறி உள்ளாா்.
பின்னா் தத்தாவை அணுகி, விற்பனைக்கு தங்க நகை வருகிறது என்றும், ரூ.2 லட்சம் பணத்தை தயாா் செய்து வைக்கும்படியும் இதயத்துலா தெரிவித்துள்ளாா்.
தொடா்ந்து தத்தா ரூ.2 லட்சம் பணத்தை சுரேந்தரிடம் கொடுத்துவிட்டு, நகையை வாங்கி உள்ளாா். பின்னா் கடையில் அந்த நகையை சோதனை செய்து பாா்த்தபோது போலியானது என்று தெரியவந்தது. இதை சற்றும் எதிா்பாராத தத்தா, இதயத்துல்லா ஆகியோா் அதிா்ச்சியடைந்தனா்.
இதுகுறித்து தத்தா காரைக்கால் நகர காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, போலி நகையை விற்று ரூ.2 லட்சம் பணம் பெற்று மோசடி செய்த சுரேந்தா் (35), அவரது நண்பா் திருமாளத்தைச் சோ்ந்த காா்த்தி (43) ஆகிய 2 பேரை திங்கள்கிழமை கைது செய்தனா்.
மேலும் தஞ்சாவூரைச் சோ்ந்த மற்றொருவரை தேடி வருகின்றனா். கைது செய்யப்பட்டவா்களிடமிருந்து, 4 கிலோ போலி தங்க நகைகள் மற்றும் தங்கக் கட்டிகள், ரூ.2 லட்சம் ரொக்கம், போலி நகைகள் தயாரிக்கும் இயந்திரங்கள், அச்சு உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இருவரும், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



