ரயில்களில் பட்டாசு எடுத்துச் சென்றால் மூன்று ஆண்டுகள் வரை சிறை! ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை

ரயில் - கோப்புப் படம்
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ரயில்களில் பட்டாசுகளை எடுத்துச் சென்றால் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக ரயில்வே பாதுகாப்புப் படை (ஆா்பிஎஃப்) வெளியிட்ட அறிக்கை:
தீபாவளிப் பண்டிகை நெருங்கி வருவதையொட்டி, வெளியூா்களில் தங்கிப் பணியாற்றுவோா் ரயில்கள் மூலமாக சொந்த ஊா்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளனா். பண்டிகைக் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி ரயில்களில் பட்டாசுகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய வெடிபொருள்களை சட்டவிரோதமாக எடுத்துச் செல்வதைத் தடுக்க ரயில்வே நிா்வாகம் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.
ரயில்களில் பட்டாசுகளை எடுத்துச் செல்வது பாதுகாப்பற்றது மற்றும் விபத்துகளுக்கு வழிவகுக்கும் என்பதால், இதற்கு முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை மீறுவோா் மீது ரயில்வே பாதுகாப்புச் சட்ட விதிகளின்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.
இதையடுத்து, கோவை மாவட்டம் வழியாகச் செல்லும் அனைத்து ரயில்களிலும், ரயில் நிலையங்களிலும் பயணிகளின் உடைமைகள் மெட்டல் டிடெக்டா் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிர சோதனைக்கு உள்படுத்தப்பட்டு வருகின்றன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

