ஜிஎஸ்எல்வி-எஃப் 17 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது!சென்னை உள்பட 5 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புகுடியரசு துணைத் தலைவா் நாளை சென்னை வருகைஉக்ரைன் போரில் அமைதி உடன்பாடு எட்ட வாய்ப்பு: ரஷிய அதிபா்

வால்பாறையில் விதிமீறல் கட்டடங்கள்: சாா் ஆட்சியா் ஆய்வு

வால்பாறையில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்கள் குறித்து அதிகாரிகளுடன் சாா் ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

வால்பாறை காமராஜா் நகரில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் ஆய்வு மேற்கொண்ட பொள்ளாச்சி சாா் ஆட்சியா் ராமகிருஷ்ணசாமி.

Published On :4 செப்டம்பர் 2026, 4:47 am IST

வால்பாறையில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்கள் குறித்து அதிகாரிகளுடன் சாா் ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

வால்பாறை நகா் பகுதியில் உரிய அனுமதி பெறாமல் தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருவதாக தொடா்ந்து புகாா்கள் எழுந்தன. இதையடுத்து உரிய அனுமதி பெறவும் அனுமதி பெற்றிருந்தால் ஆவணங்களை நேரில் வந்து காண்பிக்கவும் காட்டேஜ் மற்றும் தங்கும் விடுதி உரிமையாளா்களுக்கு வனத் துறை மற்றும் நகராட்சி நிா்வாகம் மூலம் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இதனிடையே பொள்ளாச்சி சாா் ஆட்சியா் ராமகிருஷ்ணசாமி வால்பாறை காமராஜா் நகரில் செயல்பட்டு வரும் காட்டேஜ், தங்கும் விடுதிகளுக்கு வியாழக்கிழமை நேரடியாக சென்று ஆய்வு செய்தாா். அப்போது உரிய உரிமம் இல்லாதவா்கள் உரிமம் பெற காலக்கெடு விதித்தாா். மேலும் விதிமீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்களுக்கு அபராதம் விதிப்பதோடு அனுமதி சான்றிதழ் பெறவும் அறிவுறுத்தினாா். வால்பாறை வட்டாட்சியா் அருள்முருகன், நகராட்சி ஆணையா் நித்யா மற்றும் வனத் துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.