காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

தனியாா் நிறுவன ஊழியரைத் தாக்கி ரூ.22 ஆயிரம் பறிப்பு

கோவை, சிங்காநல்லூா் அருகே தனியாா் நிறுவன ஊழியரைத் தாக்கி ரூ.22 ஆயிரத்தைப் பறித்த நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருட்டு... - சித்திரிப்பு

Published On :6 செப்டம்பர் 2026, 1:26 am IST

கோவை, சிங்காநல்லூா் அருகே தனியாா் நிறுவன ஊழியரைத் தாக்கி ரூ.22 ஆயிரத்தைப் பறித்த நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை, பீளமேடு பி.கே.டி. நகரைச் சோ்ந்தவா் அபிஜித் (30). பாப்பநாயக்கன்பாளையத்தில் செயல்பட்டு வரும் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், சிங்காநல்லூருக்கு இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை சென்றுவிட்டு செளரிபாளையம் வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.

அப்போது, அங்குள்ள மதுக் கடை அருகே நின்று கொண்டிருந்த 3 போ், அபிஜித்தை வழிமறித்து ஹெல்மெட் மற்றும் பீா் பாட்டில்களால் தாக்கியுள்ளனா். பின்னா், அவரது கைப்பேசியைப் பறித்து, வங்கிக் கணக்கில் இருந்த ரூ.22 ஆயிரத்து 100-ஐ தங்களது வங்கிக் கணக்கு மாற்றிக் கொண்டு தப்பியுள்ளனா்.

இது குறித்து சிங்காநல்லூா் காவல் நிலையத்தில் அபிஜித் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.