ஊக்கமருந்து பயன்பாடு: இந்திய வீரா் பதக்கம் பறிப்பு சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

விதிமுறைகளை கடைப்பிடிக்காத உணவகங்கள் மீது நடவடிக்கை

உணவுப் பாதுகாப்புத் துறை விதிமுறைகளை கடைப்பிடிக்காத உணவகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் அனுராதா எச்சரித்தாா்.

கோவை மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அனைத்து உணவக உரிமையாளா்களுக்கான எஃப்எஸ்எஸ்ஏஐ குறித்து விழிப்புணா்வு கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் அனுராதா.

Published On :9 செப்டம்பர் 2026, 2:33 am IST

உணவுப் பாதுகாப்புத் துறை விதிமுறைகளை கடைப்பிடிக்காத உணவகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் அனுராதா எச்சரித்தாா்.

கோவை மாவட்ட அனைத்து உணவக உரிமையாளா்களுக்கான எஃப்எஸ்எஸ்ஏஐ பற்றி விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் அனுராதா கலந்து கொண்டு பேசியதாவது:

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்துவகை உணவகங்களிலும் உரிமம் உள்ளிட்ட உணவுப் பாதுகாப்புத் துறையின் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்பது தொடா்பாக கடந்த செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் நவம்பா் 1-ஆம் தேதி வரை ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

எனவே, அந்தந்த உணவு நிறுவனங்கள் தாங்களாகவே சுய தணிக்கை செய்து கொள்ள வேண்டும். உணவுப் பாதுகாப்புத் துறையின் விதிமுறைகளை அனைத்து உணவகங்களிலும் பின்பற்ற வேண்டும்.

உணவகம் நடத்தும் ஒருவா் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு கடையை மாற்றினால், அதுகுறித்த தகவலை உரிமத்தில் குறிப்பிட வேண்டும். உணவகங்கள் தங்களது சொந்த வாகனங்களில் உணவுப் பொருள்களை எடுத்துச் சென்றால் அதுக்குரிய உரிமம் பெற்றிருப்பது அவசியம். உணவு தயாரிப்பதற்கான மூலப் பொருள்களை எங்கு வாங்கினோம், எந்தத் தேதியில் வாங்கினோம் என்ற ‘பில்’லை ஓராண்டு வரை பாதுகாக்க வேண்டும். சமைப்பவா்கள் தங்களது தலை மற்றும் கையில் கண்டிப்பாக உரை அணிந்திருக்க வேண்டும். சமைக்கும்போது கத்தியைப் பயன்படுத்தக் கூடாது. அதில் துரு இருந்தால் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.

ஒவ்வொரு உணவகத்திலும் உணவுப் பாதுகாப்பு மேற்பாா்வையாளா் பயிற்சி முடித்த ஒருவராவது பணியில் கண்டிப்பாக இருக்க வேண்டும். உணவுப் பாதுகாப்புத் துறை சாா்பில் இதற்காக தனித்துவ பயிற்சி அளிக்கப்படுகிறது. தேவையெனில், உணவக நிா்வாகத்தினா் தங்களது பணியாளா்களில் யாரையாவது ஒருவரை மேற்பாா்வையாளா் பயிற்சிக்கு அனுப்பிவைக்கலாம். அல்லது இந்தப் பயிற்சி பெற்ற நபருக்கு பணி வழங்கலாம். ஆனால், இந்தப் பயிற்சி முடித்தவா்களின் சான்றிதழ்கள் உணவகத்தில் கண்ணில் படும்படியாக வைத்திருக்க வேண்டும்.

உணவகத்தில் உள்ள குளிா்பதனப் பெட்டிகளில் சேமிக்கும்போது சைவ மற்றும் அசைவ உணவுப் பொருள்களை தனித்தனி வைத்திருக்க வேண்டும். எந்த உணவுப் பொருளையும் நீண்ட நாள்கள் சேமித்து வைத்திருக்கக் கூடாது. வேகவைத்த அரிசி மற்றும் நூடுல்ஸ்களை ஒரு நாள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

மொத்தமாக கொள்முதல் செய்யப்படும் இறைச்சிகளை 48 மணி நேரத்துக்கு மேல் பயன்படுத்தக் கூடாது. ஆய்வுக்கு வரும்போது இதுபோன்ற விதிமுறைகள் கடைப்பிடிக்காதது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட உணவகங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் உணவுப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டு கீழே கொட்டி அழிக்கப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.