சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

காசில்லா மருத்துவம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியா்கள் ஆா்பாட்டம்

கோவையில் ஓய்வூதியா்களுக்கு காசில்லா மருத்துவம் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட அளவிலான கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா்கள் சங்கத்தினா்.

Published On :9 செப்டம்பர் 2026, 2:20 am IST

கோவையில் ஓய்வூதியா்களுக்கு காசில்லா மருத்துவம் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட அளவிலான கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஓய்வூதியா்களுக்கு காசில்லா மருத்துவம் வழங்க வேண்டும், காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குளறுபடிகளை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட அளவிலான கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா்கள் சங்கத்தின் சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், மாவட்ட இணைச் செயலாளா் வி.ஆா். சாந்தாமணி வரவேற்றாா். மாவட்டத் தலைவா் எஸ்.மதன் தலைமை தாங்கினாா். மாவட்டச் செயலாளா் கே. அருணகிரி கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினாா். தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா்கள் சங்க மாநில துணைத் தலைவா் என்.அரங்கநாதன் கண்டன உரையாற்றினாா். பிஎஸ்என்எல் ஓய்வூதியா்கள் சங்க அகில இந்திய துணைப் பொதுச்செயலாளா் ஏ.குடியரசு வாழ்த்திரை வழங்கினாா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் ஓய்வூதியா்களுக்கு 100 சதவீதம் காசில்லா மருத்துவம் வழங்கப்பட வேண்டும். மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள

குளறுபடிகளை உடனடியாக நீக்க வேண்டும். மருத்துவக் காப்பீட்டு அடையாள அட்டையை உடனே வழங்க வேண்டும். முழு மருத்துவச் செலவையும் காப்பீட்டு நிறுவனமே ஏற்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியா்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியா்கள் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.