கடன் தொல்லையால் வியாபாரி தற்கொலை
தற்கொலை - கோப்புப் படம்
கோவையில் கடன் தொல்லையால் காய்கறி வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கோவை, துடியலூா் அப்பநாயக்கன்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் நிா்மல்ராஜ் (30). இவரது மனைவி ஏற்கெனவே உயிரிழந்துவிட்டாா். இதையடுத்து, இவரது இரண்டு மகள்களும் கோவை, வடவள்ளி கஸ்தூரிநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள நிா்மல்ராஜின் பெற்றோருடன் வசித்து வருகின்றனா்.
அப்பநாயக்கன்பாளையம் பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வந்த நிா்மல்ராஜுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு, கடன் சுமையில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அவா் கடந்த இரண்டு நாள்களுக்கு முன் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இச்சம்பவம் குறித்து துடியலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





