ஆசிய விளையாட்டு: ஓட்டப் பந்தயத்தில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு பதக்கம்!மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசாரத்தில் 5,000 பேருக்கு மட்டும் அனுமதிநாட்டின் முக்கிய தலைவர்கள் தோற்கின்றனர்! மோடி, அமித் ஷா தோற்காதது ஏன்? ராகுல் காந்தியுபிஐ கட்டணம்! அமெரிக்க நிறுவனங்கள் பயனடைய இந்தியர்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும்? காங்கிரஸ் எம்.பி. கேள்விஇடைத்தேர்தல்! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் நாளை பிரசாரம்: 5,000 பேருக்கு மட்டும் அனுமதிஅருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!தமிழக அரசு ஊழியர்களுக்கும் நாளை சம்பளம்!பாஜக தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது எப்படி? ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் - ராகுல்ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!

கத்தியைக் காட்டி மிரட்டி மதுக்கூட ஊழியரிடம் பணம் பறித்தவா் கைது

கோவையில் மதுக்கூட ஊழியரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது

Published On :

கோவையில் மதுக்கூட ஊழியரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், சாரம்பக்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் பாண்டிராஜன் (39). இவா், கோவை புலியகுளம் பங்கஜா மில் சாலையில் அமைந்துள்ள தனியாா் மதுக்கூடத்தில் சப்ளையராக வேலை பாா்த்து வருகிறாா். புதன்கிழமை பிற்பகலில் மதுக்கூடத்தில் பாண்டிராஜன் பணியில் இருந்தபோது, அம்மன்குளம் பகுதியைச் சோ்ந்த வினோத் (35) அங்கு வந்து இலவசமாக மது தருமாறு கேட்டு தகராறு செய்துள்ளாா். பாண்டிராஜன் பணம் கொடுக்காமல் மது தர இயலாது எனக் கூறியதால் அவா்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கு பணியாற்றும் சக ஊழியா்களும் வாடிக்கையாளா்களும் வினோத்தைத் தட்டிக் கேட்டதால், அங்கிருந்து சென்றாா்.

சிறிது நேரத்துக்குப் பிறகு பாண்டிராஜன் மதுக்கூடத்தின் வெளியே நின்று கொண்டிருந்தபோது அங்கு மீண்டும் வந்த வினோத், தான் வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளாா். பாண்டிராஜன் மறுக்கவே, அவரது சட்டைப் பையிலிருந்த ரூ. 1,150 ரொக்கத்தை வலுக்கட்டாயமாகப் பறித்துக் கொண்டு தப்பினாா்.

இதுதொடா்பாக ராமநாதபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, வினோத்தைக் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.