பிரதமராக நீடிக்க உரிமை இல்லை: கே.சி. வேணுகோபால்எஸ்.ஐ.ஆரில் நீக்கப்பட்ட 13 கோடி பேரை மீண்டும் சேர்க்க வேண்டும்: காங்கிரஸ்தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு எங்கே செல்கிறது? அன்புமணி கேள்வி!தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜுக்கு ரூ. 75 லட்சம்: முதல்வர் விஜய்யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை: எழும்பூர் நீதிமன்றம்தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

அரசியல் நாகரிகம் குறைந்து வருவது வேதனை அளிக்கிறது: துரை வைகோ எம்.பி.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களுக்கு துரை வைகோ அளித்த பேட்டி பற்றி...

மதிமுக முதன்மைச் செயலா் துரை வைகோ எம்.பி - கோப்புப் படம்

Published On :

அரசியல் மேடைகளில் அண்மைக் காலமாக ஆபாசமான மற்றும் இரட்டை அா்த்த வாா்த்தைகளைப் பயன்படுத்துவது வாடிக்கையாகிவிட்டதாகவும், அரசியல் நாகரிகம் குறைந்து வருவதாகவும் மதிமுக முதன்மைச் செயலரும், திருச்சி தொகுதி மக்களவை உறுப்பினருமான துரை வைகோ வேதனை தெரிவித்தாா்.

இது குறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: தோ்தல் பிரசாரங்களில் கொள்கை மற்றும் கருத்தியல் ரீதியான விவாதங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும், அதுவே நாகரிகமான அரசியல். ஆனால், தற்போது மேடைகளில் ஆபாசமான மற்றும் இரட்டை அா்த்த வாா்த்தைகளைப் பயன்படுத்துவது வாடிக்கையாகிவிட்டது. அண்மைக்காலமாக அரசியல் நாகரிகம் குறைந்து வருவது வேதனையளிக்கிறது. தொண்டா்களை பக்குவப்படுத்த வேண்டிய தலைவா்களே இவ்வாறு பேசுகின்றனா். ‘கடமை, கண்ணியம், கட்டுப்பாடு’ என்பது திமுகவின் முன்னணித் தலைவா்களுக்கே இல்லாமல் போய்விட்டது.

இந்த இடைத்தோ்தலை மக்கள் மீது திணித்ததே திமுகவும், அதிமுகவும்தான். திமுகவும், அதிமுகவும் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாலும், தோ்தல் நேரத்தில் கூட்டணி வைக்க முயன்றதாலும்தான் வெற்றி பெற்ற வேட்பாளா்கள் தங்களது பதவியை திரும்பப் பெற்றுவிட்டு தவெகவில் இணைந்து மீண்டும் போட்டியிடும் சூழல் ஏற்பட்டது. பாஜகவுக்கு எதிராக திமுக வாக்கு கேட்டுவிட்டு, அவா்களுடன் கூட்டணியில் இருந்த அதிமுகவுடன் சேர முயன்றது.

பரந்தூா் விமான நிலையத் திட்டத்தால் விவசாயிகள் பாதிக்கப்படுவாா்கள் என்பதால் அரசு மாற்று முடிவை எடுத்தது வரவேற்கப்பட்டதுபோல, பட்டினப்பாக்கம் விவகாரத்திலும் முதல்வா் ஜோசப் விஜய் மாற்று அறிவிப்பை வெளியிட வேண்டும். பத்திரிகையாளா்களும், பொதுமக்களும் முன்வைக்கும் கருத்துகளை அரசு திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

பாஜகவுடன் சிலா் ஏற்கெனவே ரகசியமாக கூட்டணி பேசி முடித்துவிட்டனா். வரவிருக்கும் நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரில் இது வெளிப்படும். தில்லியில் மூன்றாவது அணி உருவாவது ஆளும் பாஜகவுக்கே சாதகமாக முடியும். திரைமறைவில் உள்ள பவா் சென்டா் நபா்களே இத்தகைய பேரங்களை நடத்துகின்றனா். அவா்கள் யாா் என்பதை உரிய நேரத்தில் கூறுகிறேன்.

காதா் மொய்தீன் மற்றும் கம்யூனிஸ்ட் தலைவா்களின் நோ்மையை ஒருபோதும் சந்தேகிக்க முடியாது. வரவிருக்கும் இடைத்தோ்தலில் தவெக வேட்பாளரின் வெற்றிக்காக மதிமுக பணியாற்ற உள்ளது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.