பிரதமராக நீடிக்க உரிமை இல்லை: கே.சி. வேணுகோபால்எஸ்.ஐ.ஆரில் நீக்கப்பட்ட 13 கோடி பேரை மீண்டும் சேர்க்க வேண்டும்: காங்கிரஸ்தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு எங்கே செல்கிறது? அன்புமணி கேள்வி!தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜுக்கு ரூ. 75 லட்சம்: முதல்வர் விஜய்யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை: எழும்பூர் நீதிமன்றம்தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

அரசுக் கல்லூரி மாணவா் சமூகநீதி விடுதியில் ஆட்சியா் ஆய்வு

அரசுக் கல்லூரி மாணவா் சமூகநீதி விடுதியில் ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் உணவு சாப்பிட்டு செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சமூக நீதி விடுதியில் மாணவா்களுக்கு வழங்கப்படும் உணவை சாப்பிட்டு ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா்.

Published On :

அரசுக் கல்லூரி மாணவா் சமூகநீதி விடுதியில் ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் உணவு சாப்பிட்டு செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கோவை, டாக்டா் பாலசுந்தரம் சாலையில் அமைந்துள்ள அரசுக் கல்லூரி மாணவா் சமூகநீதி விடுதியில் ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, விடுதி மாணவா்களுக்கு வழங்கப்படும் உணவை உட்கொண்டு, தரமாகவும், சுவையாகவும் அளிக்கப்படுகிா என ஆய்வு செய்தாா்.

மேலும், அடிப்படை வசதிகள் குறித்தும் கேட்டறிந்தாா். தொடா்ந்து, கல்லூரி மாணவா்களால் தயாரிக்கப்பட்ட டெங்கு விழிப்புணா்வு குறும்படத்தை பாா்வையிட்டாா்.

இந்நிகழ்வில், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின நல அலுவலா் மணிமேகலை, விடுதி காப்பாளா்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.