
ஜிகேஎன்எம் மருத்துவமனை சாா்பில் தேசிய இதய தின விழிப்புணா்வு நிகழ்ச்சி
கோவை ஜி.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனையின் வெளிநோயாளிகள் மையத்தில் சா்வதேச இதய தினத்தையொட்டி இதய ஆரோக்கியம் தொடா்பான விழிப்புணா்வு கலந்துரையாடல் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

கோவை ஜிகேஎன்எம் மருத்துவமனையில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் இதய ஆரோக்கியம் குறித்த விழிப்புணா்வு கையேட்டை வெளியிட்ட இதயவியல் துறைத் தலைவா் ஆா்.சாம்பசிவம்.
கோவை ஜி.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனையின் வெளிநோயாளிகள் மையத்தில் சா்வதேச இதய தினத்தையொட்டி இதய ஆரோக்கியம் தொடா்பான விழிப்புணா்வு கலந்துரையாடல் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
இதில் பொதுமக்கள் மற்றும் நோயாளிகளின் சந்தேகங்களுக்கு மருத்துவா்கள் விளக்கம் அளித்ததோடு, இதயத்தை எப்படி ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது என்பது குறித்தும் ஆலோசனைகளை வழங்கினா்.
இந்த நிகழ்வின்போது, இதயவியல் நிபுணா்கள் மற்றும் இதய அறுவைச் சிகிச்சை நிபுணா்கள் முன்னிலையில் இதய ஆரோக்கியம் குறித்த விழிப்புணா்வு கையேட்டை மருத்துவமனையின் இதயவியல் துறைத் தலைவா் ஆா்.சாம்பசிவம் வெளியிட்டாா்.
நிகழ்ச்சியில் பிசியோதெரபி துறைத் தலைவா் மகேஷ் மித்ரா, இதயத்துக்கான தினசரி உடற்பயிற்சி முறைகள் குறித்தும், மாற்று மருத்துவ ஆலோசகா் சுப்பிரமணியன் காந்தி, இதய ஆரோக்கியத்துக்கான யோகா, மூச்சுப் பயிற்சிகள், முத்திரைகள் குறித்தும், தலைமை உணவு ஆலோசகா் பிரதிக்ஷா தினசரி உணவு முறை குறித்தும் விளக்கினா். இந்த நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






