
ஆந்திரா வங்கியின் புதிய கிளை ஈரோடு முனிசிபல் காலனி வீதியில் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.
இப்புதிய கிளையை ஈரோடு மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். விழாவுக்கு, தலைமை வகித்த வங்கியின் கோவை மண்டல மேளாளர் எஸ். திரிநாத் ஸ்ரீதர் கூறியதாவது:
ஆந்திரா வங்கிக்கு நாடு முழுவதும் 2,650 கிளைகள் உள்ளன. 3000 ஏடிஎம்-கள் உள்ளன. கோவை மண்டலத்தில் 65 கிளைகள் உள்ளன. 66-ஆவது கிளை முனிசிபல் காலனியில் திறக்கப்பட்டுள்ளது. நவம்பர் 23-ஆம் தேதிக்குள் கோவை மண்டலத்தில் 80 கிளைகள் தொடங்கப்படும். தமிழகத்தில் மொத்தம் 210 கிளைகள் உள்ளன என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






