சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள்! தவெகவை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!போக்சோ வீரமணிக்கு எதிரான முதல் வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிக்கை ரூ.100 கோடி மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் முன்ஜாமீன் மனு தள்ளுபடிஅமித் ஷா குறித்து அவதூறு! ராகுலுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!போக்சோ வீரமணி உள்ளிட்ட 4 பேர் மீண்டும் சிறையில் அடைப்பு!ராகுல் காந்தி பாதுகாப்பு வாகனங்கள் விபத்து! 5 கார்கள், ஆம்புலன்ஸ் மோதல்!நகராட்சி துறை அதிகாரிகள் நியமன முறைகேடு விவகாரம்: கே.என். நேரு மனு தள்ளுபடி நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டி20 போட்டியிலிருந்து இஷான் கிஷன் விலகல்!9 துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம் (அக். 26) பிரேஸில் அதிபர் தேர்தல்: லூலா டாசில்வா மீண்டும் வெற்றிவங்கக் கடலில் உருவானது 'அர்னாப்' புயல்!

சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் கூட்டம்

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

 இக்கூட்டத்துக்கு, கோபி மாநில துணை பொதுச் செயலாளர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் கணேசன், ஈரோடு மாநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் சின்னசாமி, தெற்கு மாவட்டச் செயலாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 கூட்டத்தில், இலங்கையில் நடந்த போர் குற்றங்கள் குறித்து சர்வதேச நீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டும், இலங்கை அரசை கண்டித்து செப்டம்பர் மாதம் 29-ஆம் தேதி ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும்.  கோபியில் நடைபெறும் காமராஜர் மணி மண்டப நிதியளிப்பு விழா, பொதுக் கூட்டத்துக்கு வருகை தரும் சட்டப்பேரவை உறுப்பினர் சரத்குமார், ராதிகா சரத்குமார், மாநில நிர்வாகிகளுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும், விழாவில் ஈரோடு மாவட்டத்தின் சார்பில் 10 ஆயிரம் பேர் கலந்துகொள்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 இதில், பெருந்துறை சட்டப்பேரவை தொகுதிச் செயலாளர் செந்தில்குமார், ஈரோடு வடக்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் தேவராஜ், ஒன்றிய செயலாளர்கள் குருநாதன் (அந்தியூர்), வாசுதேவன் (கோபி) உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.