மதுராந்தகம் தொகுதி தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் வெற்றி!தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்தியபாமா வெற்றிதமிழ் வம்சாவளி நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு! மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக முன்னிலை: விசிலடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!தட்டாஞ்சாவடியில் டெபாசிட் இழந்த திமுக!மதுராந்தகத்தில் தொடக்கம் முதலே கோலோச்சும் மரகதம்!தட்டாஞ்சாவடி: என்ஆர் காங்கிரஸ் வெற்றி

நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் தொடக்க விழா

கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.

Published On :

கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.

பெருந்துறை வடக்கு அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவிற்கு, பள்ளித் தலைவர் ஜி.யசோதரன் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் சி.தங்கவேல் வரவேற்றார். கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சித் தலைவர் ஜானகி குப்புசாமி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று முகாமைத் தொடங்கி வைத்தார்.

இதில், கொங்கு பள்ளி துணைத் தலைவர் எஸ்.குமாரசாமி, பொருளாளர் பி.ஆர். சுப்பிரமணியன், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ஆர்.சரவணகுமார், பொருளாளர் பி.ரவிசந்திரன், பேரூராட்சி துணைத் தலைவர் கே.பி.எஸ்.மோகன்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.கொங்கு பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் கோ.பா.ரவிகுமார் நன்றி கூறினார்.

முகாமிற்கான ஏற்பாடுகளை கொங்கு பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட உதவி அலுவலர் ஆர்.அசோக்குமார், ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.