தனித்திறன், கல்வி, விளையாட்டுகளில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு கொங்கு கலை, அறிவியல் கல்லூரியில் வியாழக்கிழமை பாராட்டு விழா நடத்தப்பட்டது.
ஈரோடு அருகே நஞ்சனாபுரத்தில் உள்ள இக்கல்லூரியில் சாதனையாளர் தின விழா வியாழக்கிழமை காலை நடைபெற்றது. விழாவுக்கு, கொங்கு வேளாளர் தொழில்நுட்பக் கல்வி அறக்கட்டளை இணைச் செயலர் ஏ.கே.இளங்கோ தலைமை வகித்தார். கல்லூரித் தாளாளர் பி.சச்சிதானந்தன் முன்னிலை வகித்தார்.
அறக்கட்டளையின் செயலர் பி.சி.பழனிச்சாமி, சாதனையாளர் தின விழா சிறப்புரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற சென்னை அட்மால் ஆர் என் டி இந்தியா நிறுவன மனிதவளப் பிரிவுத் தலைவர் சந்திரசேகர் சென்னியப்பன், கல்வி, இலக்கியம், தனித்திறன், விளையாட்டுகளில் சாதனை படைத்த சுமார் 250 மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.
விழாவில், கல்லூரி முதல்வர் என்.ராமன், வேலைவாய்ப்பு அலுவலர் கே.கே.சுரேஷ்குமார், பைன் ஆர்ட்ஸ் கிளப் ஒருங்கிணைப்பாளர் எம்.எஸ்.கோகிலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விளையாட்டு விழா: அதைத் தொடர்ந்து, மாலையில் விளையாட்டு விழா நடைபெற்றது. இதற்கு, கொங்கு பாலிடெக்னிக் கல்லூரித் தாளாளர் சி.குமாரசாமி தலைமை வகித்தார். கல்லூரி அறக்கட்டளை பொருளாளர் ஈ.ஆர்.கார்த்திக்கேயன் முன்னிலை வகித்தார். கோவை ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா பல்கலைக்கழக உடற்கல்வித்துறை இயக்குநர் எஸ்.அழகேசன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
தேசிய, மாநில, பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பிடித்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு அவர் பரிசு வழங்கினரர். கல்லூரி உடற்கல்வி இயக்குநர் சங்கர் உள்பட பலர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




