பெருந்துறை அருகே, ஏற்றுமதி நிறுவனத்தில் திருட முயன்ற ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்த 3 பேரை பெருந்துறை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தீபக்குமார் மகாராஜா (25), மனோஜ்குமார் தாஸ் (20), ஜிதேந்திர பாண்டா ( 22). இவர்கள் மூவரும், பெருந்துறையை அடுத்த, பணிக்கம்பாளையம் பகுதியில் அறை எடுத்துத் தங்கி, அங்குள்ள ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர்.
இந்நிலையில், நிறுவனத்தின் காவலர்கள் செவ்வாய்க்கிழமை இரவு ரோந்து சென்றபோது, அவர்கள் மூவரும் நிறுவனத்தின் சுற்றுச் சுவருக்கு வெளியே, துணி பண்டல்களை வீசிக் கொண்டிருந்ததைப் பார்த்துள்ளனர். சந்தேகம் அடைந்து விசாரித்தபோது, அதை அவர்கள் திருடிச் செல்ல முயன்றது தெரியவந்தது. இதுகுறித்து, நிறுவனத்தினர் அளித்த புகாரின்பேரில் பெருந்துறை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, மூவரையும் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.