கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

பவானி நதிக் கரையில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு

பவானி நதிக் கரையில்சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு  எதிர்ப்பு வலுத்துள்ளது.

Updated On :9 ஏப்ரல் 2018, 12:06 am

பவானி நதிக் கரையில்சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு  எதிர்ப்பு வலுத்துள்ளது.
இது தொடர்பாக பவானியைக் காப்போம் இளையோர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.சி.நடராஜ் கூறியதாவது:
சத்தியமங்கலம் நகராட்சி சார்பில் பவானிஆற்றின் இடதுகரைப் பகுதியில் பிள்ளையார் கோயில் தெருவில் கழிவுநீர் சேகரிப்பு நிலையம் அமைப்பதற்காக கட்டடப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இங்கு மக்கள் அதிகமாக வசித்து வருகின்றனர்.  இதேபோல கோட்டுவீரம்பாளையத்தில் உள்ள மின் மயானம் மற்றும் ஆடுவதைக் கூடம் அருகில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்திடும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
மேலும், ஆற்றின் வலது கரையில் ரங்கசமுத்திரம் பகுதியில் ராகவேந்திரா பள்ளி அருகில் கழிவுநீர் சேகரிப்பு நிலையமும், கூத்தனூர் சாலை ஆர்.எம்.பி. நகருக்கும் கண்ணப்பன் லே-அவுட்டுக்கும் இடையில் ஒரு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமும் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் ரூ.54.26 கோடி திட்டத்தில்  திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றில் பிள்ளையார் கோயில் தெருவில் அமையும் கழிவுநீர் சேகரிப்புநிலையமானது ஆற்றிலேயே கட்டப்பட்டுக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. மேலும், கோட்டுவீரம்பாளையத்தில் உள்ள மின் மயானம் மற்றும் ஆடுவதைக்கூடம் அருகில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்ஆற்றின் கரையில் நதிக்கு மிக அருகில் கட்டப்பட்டுகிறது. 
ஏற்கெனவே பல ஆலைக் கழிவுகளால் மாசுபட்டுள்ள பவானி ஆற்றின் கரையில்
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்படஅனுமதித்தால் பவானி ஆறு மேலும் மாசுபடும். சுற்றுச் சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். எனவே, இந்த கட்டுமானப் பணிகளைநிறுத்தி வைப்பதுடன் வேறு இடத்தில் அமைக்க வேண்டும். அத்துடன் சுத்திகரித்த நீரை ஆற்றில் கலக்கக் கூடாது என தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.