
சத்தியமங்கலத்தில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ரீடு நிறுவனம் கடந்த 18 ஆண்டுகளாக குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கும், பொருளாதார முன்னேற்றத்துக்கும், தொழிலாளர்களின் நலனுக்கும் பணியாற்றி வருகிறது.
இந்நிலையில், சத்தியமங்கலத்தில் பெற்றோரை இழந்த மாணவ, மாணவிகள், 10 ஆம் வகுப்பில் 400-க்கும் மேற்பட்ட மதிப்பெண்களும், பிளஸ் 2 வகுப்பில் 1000- க்கும் மேற்பட்ட மதிப்பெண்களும் பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் படிக்க வசதியில்லாத பள்ளி, கல்லூரி அருந்ததிய மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், ஈரோடு, கோவை, நாமக்கல், சேலம், மதுரை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 50 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ. 5 ஆயிரம் வீதம் ரூ. 2.50 லட்சம் கல்வி உதவித் தொகையாக வழங்கப்பட்டது.
இந்த விழாவில், ரீடு நிறுவனத்தின் இயக்குநர் கருப்புசாமி, சமூக ஆர்வலர்கள் அதியமான், நாகராஜன், கோவை ரவிக்குமார், பொன்னுசாமி, குருசாமி, மோகன்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதற்கான ஏற்பாடுகளை ரீடு திட்ட மேலாளர் மகேஷ்வரன் தலைமையில் அதன் பணியாளர்கள் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





