நாசிக்கில் மீண்டும் நிலநடுக்கம் பொதுத் தேர்வுகளைச் சீரமைக்க அரசு நடவடிக்கை! - குடியரசுத் தலைவர் முர்மு உரை!சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவு!கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல் சுதந்திர நாள்: ஆளுநரின் தேநீர் விருந்து இல்லை! - மக்கள் மாளிகை
/

குறுமைய தடகளப் போட்டி: சாரு மெட்ரிக். பள்ளி சாம்பியன்

சத்தியமங்கலம் வட்டார அளவில் நடைபெற்ற குறுமைய தடகளப் போட்டியில் சாரு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றனர்.

Updated On :30 ஜனவரி 2024, 10:07 pm IST

சத்தியமங்கலம் வட்டார அளவில் நடைபெற்ற குறுமைய தடகளப் போட்டியில் சாரு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றனர்.
மில்மேடு அரசு உயர்நிலைப் பள்ளி, பண்ணாரி அம்மன் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற இப்போட்டியில், இளையோர் பிரிவில் சரத்குமார் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் முதலிடமும், நீளம் தாண்டுதலில் மூன்றாமிடமும், ஸ்ரீகாந்த் தட்டு எறிதலில் முதலிடமும், சஞ்சய் தட்டு எறிதலில் மூன்றாமிடமும், 4ல100 தொடர் ஓட்டப் போட்டியில் இரண்டாமிடமும் பெற்றனர்.
மூத்தோர் பிரிவில் பூபதி 1500 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் முதலிடமும், செல்வம் தட்டு எறிதலில் முதலிடமும், ஈட்டி எறிதலில் முதலிடமும், ரிஷிகேஷ் குண்டு எறிதலில் முதலிடமும், அரவிந்த் கோலூன்றி தாண்டுதலில் முதலிடமும், சித்தார்த் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் மூன்றாமிடமும், தமிழரசன் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் மூன்றாமிடமும் பெற்றனர்.
மிக மூத்தோர் பிரிவில் அருண் 400 மீட்டர் ஓட்டப் பந்தயம், 400 மீட்டர் தடைதாண்டுதல், மும்முறை தத்தித் தாண்டுதலில் முதலிடமும், நீளம் தாண்டுதலில் மூன்றாமிடமும், சுந்தரதிலீபன் 3000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் முதலிடமும், ஐகிசான் தட்டு எறிதலில்  முதலிடமும், ஹேமசந்திரன் குண்டு எறிதலில் முதலிடமும், ஈட்டி எறிதலில் மூன்றாமிடமும், யோகேஸ்வரன் குண்டு எறிதல், தட்டு எறிதலில் இரண்டாமிடமும், சுனில்குமார் 5000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் முதலிடமும், அருண்குமார் கோலூன்றி தாண்டுதலில் முதலிடமும், தீபக்குமார் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் மூன்றாமிடமும், 400 தொடர் ஓட்டத்தில் முதலிடமும் பெற்றனர்.
சத்தியமங்கலம் சாரு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தடகளப் போட்டிகளில் 95 புள்ளிகள் பெற்று தொடர்ந்து ஒன்பதாவது ஆண்டாக ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றுள்ளனர். மிக மூத்தோர் பிரிவில் அருண் 16 புள்ளிகள் பெற்று தனிநபர் சாம்பியன் பட்டத்தையும் பெற்றார்.
பரிசு பெற்ற மாணவ, மாணவியருக்கு உறுதுணையாக இருந்து பயிற்சி அளித்த ஆசிரியர்கள் விஜய் அமிர்தராஜ், கதிர்வேல் ஆகியோரை பள்ளியின் நிறுவனர் சாமியப்பன், தாளாளர் ருக்மணி சாமியப்பன், செயலாளர் சக்தி பாலாஜி, நிர்வாக இயக்குநர் பாரதி சக்திபாலாஜி, முதல்வர் கண்ணகி, ஆசிரியர்கள் அனைவரும் பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.