
மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட அரசுப் பள்ளிகளில் பயிலும் 370 மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது.
மொடக்குறிச்சி தாலுகா, மின்னப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 71 பேருக்கும், எழுமாத்தூர் மண்கரடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 51 பேருக்கும், லக்காபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 248 பேருக்கும் என 370 மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை, மொடக்குறிச்சி சட்டப் பேரவை உறுப்பினர் வி.பி.சிவசுப்பிரமணி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், ஆவின் இயக்குநர் அசோக், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் தட்சிணாமூர்த்தி, குலவிளக்கு ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் என்.ஆர்.நடராஜ், விளக்கேத்தி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் குலவிளக்கு செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





