/

ஆகஸ்ட் 1 ஆம் தேதி கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு: அமைச்சர் கே.சி.கருப்பணன் பேட்டி

பவானிசாகர் அணையில் இருந்து ஆகஸ்ட் 1ஆம் தேதி கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படும் என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்தார்.

Updated On :23 ஜூலை 2018, 7:45 am IST

பவானிசாகர் அணையில் இருந்து ஆகஸ்ட் 1ஆம் தேதி கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படும் என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்தார்.
அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் சத்தியமங்கலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பின் அமைச்சர் கே.சி.கருப்பணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 110 அடியை எட்டியுள்ளது.அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பியுள்ளன. பவானிசாகர் அணையும் 8 நாளில் நிரம்பிவிடும். இதையடுத்து ஆகஸ்ட் 1ஆம் தேதி கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்குத் தண்ணீர் திறந்துவிடப்படும். ஏற்கெனவே தடப்பள்ளி, அரக்கன்கோட்டை மற்றும் காலிங்கராயன் வாய்க்காலுக்குத் தண்ணீர் திறக்கப்பட்டு உழவுப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.