அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

இருசக்கரவாகனம் மோதி பெண் சாவு

பெருந்துறை அருகே, இருசக்கர வாகனம் மோதியதில் சாலையில் நடந்துச் சென்ற பெண் உயிரிழந்தார். அவரது பேத்தி காயமடைந்தார்.

Updated On :24 ஜூலை 2018, 12:44 am IST

பெருந்துறை அருகே, இருசக்கர வாகனம் மோதியதில் சாலையில் நடந்துச் சென்ற பெண் உயிரிழந்தார். அவரது பேத்தி காயமடைந்தார்.
சத்தியமங்கலத்தை அடுத்த புளியம்பட்டி,  அண்ணமார் கோயிலைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் (50). இவரது மனைவி செல்லம்மாள் (45),  மகன் பாலு (25), மகள் தெய்வானை (22),  மருமகள் ஜோதிமணி (22), பேத்தி மாசானி (3). இவர்கள், ஊர் ஊராக சென்று பாட்டுப்பாடி பிச்சை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. 
இந்நிலையில், பெருந்துறை வார சந்தையில், ஈஸ்வரன், செல்லம்மாள் குடும்பத்துடன் பாட்டுப்பாடி ஞாயிற்றுக்கிழமை பிச்சை எடுத்தாக கூறப்படுகிறது. 
பின்னர், மாலையில் ஊருக்கு  செல்ல பேருந்து நிலையம் நோக்கிச் சாலையில்  நடந்துச் சென்றனர். அப்போது, அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம், செல்லம்மாள், பேத்தி மாசானி ஆகியோர் மீது மோதியது.   இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். 
இதையடுத்து இருவரும் ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு செல்லம்மாள் திங்கள்கிழமை உயிரிழந்தார். 
இதுகுறித்து, பெருந்துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.