வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 வரை மின் கட்டண சேவைகள் இயங்காது கொசோவோ, ஆா்மீனியாவில் இன்று நாடாளுமன்றத் தோ்தல் நீட் மறுதோ்வு வினாத்தாள் கசிந்ததாக வதந்தி: என்டிஏ எச்சரிக்கை அணுசக்தித் துறையில் பொருத்தமான கூட்டாளி இந்தியா: அமெரிக்க அணுசக்தி கூட்டமைப்புத் தலைவா்இந்திய வம்சாவளியினருக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகள் முடக்கம்: சிங்கப்பூா் அரசு உத்தரவு
/

சிறு, குறு விவசாயிகளுக்கு சான்று: இன்று சிறப்பு முகாம்

கோபி,  சிறுவலூர் பகுதி விவசாயிகளுக்கு சிறு, குறு உழவர் சான்று வழங்குவதற்கான சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 24) நடைபெற உள்ளது.

Updated On :24 ஜூலை 2018, 12:45 am IST

கோபி,  சிறுவலூர் பகுதி விவசாயிகளுக்கு சிறு, குறு உழவர் சான்று வழங்குவதற்கான சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 24) நடைபெற உள்ளது.
இதுகுறித்து கோபி வேளாண்மை உதவி இயக்குநர் அ.நே.ஆசைத்தம்பி  தெரிவித்துள்ளதாவது:
கோபி வட்டாரத்துக்கு உள்பட்ட கோபி, சிறுவலூர் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசனத் திட்டத்துக்காக வருவாய்த் துறை மற்றும் வேளாண்மைத் துறை ஆகியன சார்பில் சிறு விவசாயி சான்று வழங்கும் சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது.
கோபி பிர்காவில் அடங்கியுள்ள வீரபாண்டி,  பாரியூர், பழைய பாரியூர், குள்ளம்பாளையம், மொடச்சூர், அக்ரஹாரக்கரை, லக்கம்பட்டி, செய்யாம்பாளையம், செங்கலரை, கலிங்கியம், கோட்டுப்புள்ளாம்பாளையம், அயலூர்  ஆகிய 12 கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு 
கோபி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கிலும்,  சிறுவலூர் பிர்காவில் அடங்கியுள்ள கொளப்பலூர், பொலவக்காளிபாளையம்,  கடுக்காம்பாளையம்,  சந்திராபுரம், வெள்ளாங்கோயில், சிறுவலூர், நாதிபாளையம், நாகதேவன்பாளையம் ஆகிய 8 கிராமங்களில் உள்ள
சிறு, குறு விவசாயிகளுக்கு சிறுவலூர்  ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் செவ்வாய்க்கிழமை காலை 10 முதல் மாலை 5 மணி வரை இந்த சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
விவசாயிகள் தங்களது ஆதார் அட்டை நகல்,  பூமி பத்திர நகல்,  கணினி சிட்டா,  வில்லங்கச் சான்று,  பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் வந்து சிறு, குறு விவசாயி சான்று பெறுவதற்கு பதிவு செய்து கொள்ளலாம். 
கோபி வட்டாரத்தில் நுண்ணீர் பாசனத்துக்கு 1,375 ஏக்கருக்கு மானியம் வழங்குவதற்கு இலக்கு வழங்கப்பட்டுள்ளது.  சொட்டுநீர், தெளிப்பு நீர் கருவிகளுக்கு 100 சதவீத மானியம் பெற சிறு,குறு விவசாயி சான்று கண்டிப்பாகத் தேவை என்பதால் அனைத்து விவசாயிகளும் இந்த முகாமில் தவறாது கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.