பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் ஈரோட்டில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில், ஈரோடு மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத் தலைவர் பெரியசாமி தலைமை வகித்தார். கிளைச் செயலர் ஜோதிமணி, மாநில துணைப் பொதுச் செயலர் இளங்கோ, சிஐடியூ மாவட்டச் செயலர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
ஒப்பந்ததாரர்கள் செய்ய வேண்டிய மின் பாதை நீட்டிப்பு உள்ளிட்ட பிற பணிகளில் மின்வாரிய ஊழியர்களை ஈடுபடுத்தக் கூடாது. பண்டக சாலையில் மின் தளவாடப் பொருள்களை ஏற்றி, இறக்கும் பணிகளில் மின் ஊழியர்களைப் பயன்படுத்தக் கூடாது. தற்காலிக பணியிட மாற்றம் எனும் பெயரில் முறைப்பணி பணியாளர்களை அலுவலகப் பணியில் ஈடுபடுத்தக் கூடாது. ஜிபிஎப் முன்பணம், பகுதி இறுதி தொகை, எஸ்எல்எஸ் தொகைகளை வழங்குவதில் காலதாமதம் செய்யாமல் விரைவில் வழங்க வேண்டும். ஊதிய உயர்வு ஒப்பந்தப்படி, ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ரூ.380 தினக்கூலியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இந்திய ரசிகர்களுக்காக 1 மணிநேரம் முன்னதாக நடைபெறும் இங்கிலாந்து தொடர்!

இன்றைய செய்திகள் ஜூன் 9 - நேரலை!

நடிகர் சூரி நடிக்கும் மண்டாடி அப்டேட்!

சிங்கப்பெண் அதிரடிப்படை திட்ட இலச்சினை வெளியீடு!
விடியோக்கள்

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking


