கோபி, சிறுவலூர் பகுதி விவசாயிகளுக்கு சிறு, குறு உழவர் சான்று வழங்குவதற்கான சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 24) நடைபெற உள்ளது.
இதுகுறித்து கோபி வேளாண்மை உதவி இயக்குநர் அ.நே.ஆசைத்தம்பி தெரிவித்துள்ளதாவது:
கோபி வட்டாரத்துக்கு உள்பட்ட கோபி, சிறுவலூர் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசனத் திட்டத்துக்காக வருவாய்த் துறை மற்றும் வேளாண்மைத் துறை ஆகியன சார்பில் சிறு விவசாயி சான்று வழங்கும் சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது.
கோபி பிர்காவில் அடங்கியுள்ள வீரபாண்டி, பாரியூர், பழைய பாரியூர், குள்ளம்பாளையம், மொடச்சூர், அக்ரஹாரக்கரை, லக்கம்பட்டி, செய்யாம்பாளையம், செங்கலரை, கலிங்கியம், கோட்டுப்புள்ளாம்பாளையம், அயலூர் ஆகிய 12 கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு
கோபி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கிலும், சிறுவலூர் பிர்காவில் அடங்கியுள்ள கொளப்பலூர், பொலவக்காளிபாளையம், கடுக்காம்பாளையம், சந்திராபுரம், வெள்ளாங்கோயில், சிறுவலூர், நாதிபாளையம், நாகதேவன்பாளையம் ஆகிய 8 கிராமங்களில் உள்ள
சிறு, குறு விவசாயிகளுக்கு சிறுவலூர் ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் செவ்வாய்க்கிழமை காலை 10 முதல் மாலை 5 மணி வரை இந்த சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
விவசாயிகள் தங்களது ஆதார் அட்டை நகல், பூமி பத்திர நகல், கணினி சிட்டா, வில்லங்கச் சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் வந்து சிறு, குறு விவசாயி சான்று பெறுவதற்கு பதிவு செய்து கொள்ளலாம்.
கோபி வட்டாரத்தில் நுண்ணீர் பாசனத்துக்கு 1,375 ஏக்கருக்கு மானியம் வழங்குவதற்கு இலக்கு வழங்கப்பட்டுள்ளது. சொட்டுநீர், தெளிப்பு நீர் கருவிகளுக்கு 100 சதவீத மானியம் பெற சிறு,குறு விவசாயி சான்று கண்டிப்பாகத் தேவை என்பதால் அனைத்து விவசாயிகளும் இந்த முகாமில் தவறாது கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கேரள அரசின் அடுத்த தலைமைச் செயலராக விஸ்வநாத் சின்ஹா நியமனம்!

மதிய உணவுத் திட்டத்தில் முட்டை நீக்கம்! மாணவர்கள் அதிர்ச்சி! எங்கே?

நடிகர் மனோகர் மகன் திருமணம்! ஒன்றாகப் பங்கேற்ற ஈரமான ரோஜாவே குழுவினர்!

உயிருள்ள சிலை... உலகக் கோப்பையில் பங்கேற்ற காங்கோ ரசிகர்!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


