பாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

இந்து மதத்தை இழிவுபடுத்திப் பேசியதாக கோவன் மீது பாஜக புகார்

பிரதமர் நரேந்திர மோடியையும், இந்து மதத்தையும் இழிவுபடுத்தும் விதத்தில் பாடல் பாடியதாக மக்கள் கலை இலக்கியக் கழகத்தை சேர்ந்த

Updated On :29 மார்ச் 2018, 3:09 am

பிரதமர் நரேந்திர மோடியையும், இந்து மதத்தையும் இழிவுபடுத்தும் விதத்தில் பாடல் பாடியதாக மக்கள் கலை இலக்கியக் கழகத்தை சேர்ந்த கோவன் மீதும், அந்த இயக்கத்தின் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி ஈரோடு மாவட்ட பாஜக இளைஞரணிச் செயலாளர் சரவணன் தலைமையில் மொடக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் மனு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தப் புகார் மனுவில் கூறியிருப்பதாவது: 
சமூக வலைதளத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தை சேர்ந்த கலைக்குழு தயாரித்த பாடல் வெளியாகியுள்ளது. இதில், அந்த அமைப்பின் பாடகர் கோவன் மற்றும் சிலர் பாட்டுப் பாடியும், நடனமாடியும்  ராம ராஜிய ரத்தை இழிவாகச் சித்தரித்து பாடியுள்ளனர். மேலும் பாடல் வரிகளில் பிரதமர் நரேந்திரமோடி குறித்து ஒருமையில் குறிப்பிட்டுள்ளனர். 
எனவே, அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வரும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மீது நடவடிக்கை எடுப்பதுடன், அந்த இயக்கத்தைத் தடை செய்ய வேண்டும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மனு அளிக்கும் நிகழ்வில் பாஜக மொடக்குறிச்சி ஒன்றிய இளைஞரணி துணைச் செயலாளர் கணபதி, பாஜக ஒன்றியப் பொதுச் செயலாளர் செல்வகுமார் உள்ளிட்டோரும் மனு உடனிருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.