சித்திரைத் திருவிழா: பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்!6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

3 சாய ஆலைகளின் மின் இணைப்பு துண்டிப்பு

ஈரோட்டில் சாயக் கழிவு நீரை வெளியேற்றிய மூன்று தொழிற்சாலைகளின் மின் இணைப்புகள் புதன்கிழமை துண்டிக்கப்பட்டன. 

Updated On :29 மார்ச் 2018, 3:06 am

ஈரோட்டில் சாயக் கழிவு நீரை வெளியேற்றிய மூன்று தொழிற்சாலைகளின் மின் இணைப்புகள் புதன்கிழமை துண்டிக்கப்பட்டன. 
ஈரோடு மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் சாய, சலவை, தோல் ஆலைகள் செயல்பட்டு வருகின்றன.  இதில் சாயம் சலவை மற்றும் தோல் தொழிற்சாலைகள் பூஜ்ய சதவீதம் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, சுத்திகரிக்கப்பட்ட  கழிவு நீரை மீண்டும் பயன்படுத்தி வருகின்றன.ஆலைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாத கழிவு நீரை ஓடைகள் வழியாக காவிரி ஆறு, காலிங்கராயன் வாய்க்காலில் வெளியேற்றுவதைத் தடுக்கும் வகையில், ஈரோடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தொடர் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
அதன் அடிப்படையில் மார்ச் 21, 22 ஆகிய தேதிகளில் வீரப்பன் சத்திரம், பி.பெ. அக்ரஹாரம் ஆகிய பகுதிகளில் மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரி மலையாண்டி தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.  
அதில், சுத்திகரிக்கப்படாத தொழிற்சாலைக் கழிவு நீரை வெளியேற்றிய 2 சாயப் பட்டறை, ஒரு சலவைப் பட்டறை செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த மூன்று தொழிற்சாலைகளின் மின் இணைப்புகளைத் துண்டிக்க மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர்  உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து 3 ஆலைகளின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.