சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு! ஆக.18-ல் சீன முன்னாள் பிரதமரின் இறுதிச்சடங்கு அரவிந்த் கேஜரிவாலுக்கு மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துபெண்களை இழிவுபடுத்தும் வகையில் நயினாரின் பேச்சு: சிபிஎம் கண்டனம்!சுதந்திர நாள் அணிவகுப்புப் பணியின்போது காவலர் பலி: ரூ. 30 லட்சம் நிதியுதவி!ஐரோப்பாவை வாட்டி வதைக்கும் வெப்ப அலை: 16,000 பேர் பலிஆவணி மாத பூஜை: சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறப்பு
/

காவிரி மேலாண்மை வாரிய விவகாரம்: கறுப்பு வில்லை அணிந்து பணியாற்றிய ஆம்புலன்ஸ் ஊழியர்கள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, தனியார் அவசர ஊர்தி  ஊழியர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்தும்,  ஆம்புலன்ஸின் முகப்புக் கண்ணாடியில் துண்டறிக்கை ஒட்டியும் திங்கள்கிழமை பணியாற்றினர். 

Updated On :30 ஜனவரி 2024, 6:30 pm IST

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, தனியார் அவசர ஊர்தி  ஊழியர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்தும்,  ஆம்புலன்ஸின் முகப்புக் கண்ணாடியில் துண்டறிக்கை ஒட்டியும் திங்கள்கிழமை பணியாற்றினர். 
 தமிழ்நாடு தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் சங்கம் சார்பில், மாவட்டம் முழுவதும் இயங்கி வரும் சுமார் 300-க்கும் மேற்பட்ட  ஆம்புலன்ஸ் வாகனங்களில் கறுப்புக் கொடி கட்டியும், ஊழியர்கள் கறுப்பு வில்லை அணிந்தும், முகப்புக் கண்ணாடியில் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடு என்ற வாசகம் அடங்கிய துண்டறிக்கையையும் ஒட்டி திங்கள்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 இதுகுறித்து மாவட்ட துணைத் தலைவர் கோபால் கூறுகையில், ஈரோடு நகரில் மட்டும் 120 ஆம்புலன்ஸ்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றன. கோபி, சத்தியமங்கலம், பவானி, பெருந்துறை, காங்கயம், தாராபுரம், திருப்பூர், கோவை ஆகிய பகுதிகளில் செயல்படும் ஆம்புலன்ஸ்களில் கறுப்புக் கொடி கட்டப்பட்டது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.