சென்னிமலை கொங்கு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத் தேர்தலில் தற்போதுள்ள இயக்குநர்கள் போட்டியிடத் தகுதியில்லை என்ற திடீர் அறிவிப்பால், அதிமுக ஒன்றியச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான கட்சியினர், கொங்கு கைத்தறி நெசவாளர் சங்க அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னிமலை வட்டாரத்தில் 42 கைத்தறி கூட்டுறவு சங்கங்கள் செயல்படுகின்றன. மூன்றாம் கட்டமாக நடந்த கூட்டுறவுத் தேர்தலில் இந்திரா டெக்ஸ், அம்மா டெக்ஸ், மெட்ரோ டெக்ஸ், செந்தூர் முருகன் டெக்ஸ், சென்னியங்கிரி டெக்ஸ், அங்காள பரமேஸ்வரி டெக்ஸ், கொங்கு டெக்ஸ், இச்சிபட்டி டெக்ஸ், சுப்பிரமணியசுவாமி டெக்ஸ், சேரன் டெக்ஸ், ராணி ரங்கநாயகி டெக்ஸ் ஆகிய 11 கைத்தறி கூட்டுறவு சங்கங்களுக்கு திங்கள்கிழமை காலை வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.
இதில், சில புதிய இயக்குநர்கள் தவிர பழைய இயக்குநர்களே மனு தாக்கல் செய்தனர்; எந்த சங்கத்திலும் போட்டியில்லை. ஆனால், சென்னிமலை கொங்கு நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் மட்டும் தற்போதுள்ள இயக்குநர்களைத் தவிர அதிமுகவைச் சேர்ந்த 8 பேர் உள்பட மொத்தம் 15 பேர் மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில், தற்போதுள்ள இயக்குநர்கள் போட்டியிடத் தகுதி இல்லை என அதிகாரிகள் கூறியதாக தற்போதைய கொங்கு கைத்தறி நெசவாளர் சங்கத் தலைவர் யுவராஜ், அதிமுக ஒன்றியச் செயலாளர் கோபாலகிருஷ்ணனிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து, அதிமுகவினர், சங்க உறுப்பினர்கள், கோபாலகிருஷ்ணன் தலைமையில் கொங்கு கைத்தறி நெசவாளர் சங்க அலுவலம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒரு மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு, ஒன்றியச் கோபாலகிருஷ்ணனிடம் செல்லிடப்பேசியில் பேசிய கைத்தறித் துறை உதவி இயக்குநர் பிச்சமுத்து, புதிய பட்டியலை கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கொடுத்துள்ளதாகக் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கட்சியினருடன் 22 ஊராட்சிச் செயலாளர்கள், நகரச் செயலாளர் சேமலையப்பன் ஆகியோர் திரண்டதால், போராட்டம் வலுவடைந்தது. சம்பவ
இடத்துக்கு வந்த சென்னிமலை போலீஸார்பேச்சு நடத்தினர்.
இறுதியில், மீண்டும் ஏழு பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்வது என முடிவு செய்யப்பட்டு, மொத்தம் 22 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். அதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






