சீரடியில் விஜய் வழிபாடு!வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்! இன்று மாலை 6.30 மணிக்குப் பிறகு வெளியாகும்!திரிணமூல் காங். கட்சியினர் மீது சிஆர்பிஎஃப் தாக்குதல்! மமதா குற்றச்சாட்டுமேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது!மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம்! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்தது!
/

குமுதா பள்ளியில் கிருஷ்ண ஜயந்தி விழா

கோபிசெட்டிபாளையம் அருகே நம்பியூரில், குமுதா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. 

Updated On :3 செப்டம்பர் 2018, 1:20 am

கோபிசெட்டிபாளையம் அருகே நம்பியூரில், குமுதா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. 
விழாவில் மாணவ, மாணவிகள் கண்ணன், ராதை வேடமணிந்து கலந்துகொண்டனர். பள்ளி வளாகத்தில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் மாணவ, மாணவிகள் பாட்டுப் பாடியும், நடனமாடியும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
இதில் சிறந்த  மாணவ மாணவிகளுக்கு பள்ளித் தாளாளர் கே.ஏ.ஜனகரத்தினம் பரிசு வழங்கினார்.  மாணவ, மாணவிகளை இணை தாளாளர் சுகந்தி, செயலாளர் டாக்டர் அரவிந்தன், இணை செயலர் டாக்டர் மாலினி, முதல்வர் மஞ்சுளா, தலைமையாசிரியை வசந்தி மற்றும் ஆசிரியைகள் பாராட்டினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.