எந்த ஒரு செயலிலும் கூட்டு முயற்சியே வெற்றிக்கு துணை நிற்கிறது என கிருஷ்ணராஜ் வாணாவராயர் கூறினார்.
கோபிசெட்டிபாளையம், பிகேஆர் மகளிர் கல்லூரியின் நிறுவனர் தின விழாவும், கல்லூரி 25ஆம் ஆண்டு தொடக்க விழாவும், தாளாளர் மற்றும் செயலர் பி.என்.வெங்கடாசலம் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. முதல்வர் மைதிலி வரவேற்றார். கல்லூரியின் நிறுவன முதல்வர் ஜெகதா லட்சுமணன், கல்வி நிறுவனத்தின் 25 ஆண்டு வளர்ச்சி குறித்து விளக்கினார்.
விழாவில் , கோவை பாரதிய வித்யாபவன் தலைவர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:
தமிழகத்தின் சிறந்த கல்லூரிகளில் இந்தக் கல்லூரியும் ஒன்றாக திகழ்வதற்கு காரணம் கூட்டு முயற்சியே ஆகும். முந்தைய காலத்தில் பெண்கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாமல் இருந்தது. ஆனால் இன்று பெண்கல்வி மிகவும் அவசியமானதாக உள்ளது.
சமுதாயத்தில் பெண்களின் பங்களிப்பு அதிகமாக தேவைப்படுகிறது. முன்னர் பெண்களுக்கு உயர்கல்வி மறுக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த நிலை மாறி பெற்றோர் தங்களது பெண் குழந்தைகளைப் படிக்க வைத்து வருகின்றனர். பெண்களுக்கு உரிய மதிப்பும், மரியாதையும் தராத தேசம் உயர்வதில்லை. பெண்களுக்கு உரிய கல்வியை வழங்கினால் அவர்களே வாழ்க்கையில் உயர்ந்து விடுவார்கள். பேராசிரியைகள் தங்களது மாணவிகளை சிறந்த பட்டதாரிகளாக உருவாக்குவதுடன் நல்ல மனிதர்களாகவும் உருவாக்க முயற்சிக்க வேண்டும். மாணவிகளுக்கு அடக்கம் அதிகமானால் பொறுமை அதிகமாகும். அனுசரனை, நிதானம், சகிப்புத்தன்மை, செயல்திறன் ஆகியவை கடைப்பிடிக்க வேண்டும்.
இங்கு பயிலும் மாணவிகளில் பெரும்பான்மையினர் கிராமப் பகுதியில் இருந்தும், விவசாயிகளின் குடும்பத்தில் இருந்தும், விவசாயக் கூலித் தொழிலாளியின் குடும்பத்திலும் இருந்தும் வந்துள்ளனர். இந்தக் கல்லூரியில் கடந்த 24 ஆண்டுகளில் 11,400 மாணவிகளை பட்டதாரிகளாக உருவாக்கியிருப்பது பாராட்டத்தக்கது என்றார்.
கல்லூரி நிறுவனர் பி.ஆர்.நடராஜன் அறக்கட்டளை சார்பில், கல்லூரியில் விளையாட்டு மற்றும் கல்வியில் சிறந்து விளங்கிய மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையையும், பரிசுகளையும் கிருஷ்ணராஜ் வாணவராயர் வழங்கினார்.
நிகழ்ச்சியில், பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் சிலம்பண்ணன், கல்லூரித் தலைவர் பி.ஆர்.விஸ்வநாதன், துணை முதல்வர் எஸ்.ஏ.தனலட்சுமி, அறக்கட்டளை உறுப்பினர்கள் டாக்டர் செந்தில்நாதன், பி.என்.செல்வராஜ், லட்சுமி நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK

"Exit Poll is NOT Exact Poll" தமிழிசை சௌந்தரராஜன் | BJP

ஆஸ்துமா உள்ள குழந்தைகள் வெளியில் விளையாடலாமா?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

