உ.பி.க்கு எதிராக திமுக செயல்படுகிறது! மோடி குற்றச்சாட்டுசீரடியில் விஜய் வழிபாடு!வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்! இன்று மாலை 6.30 மணிக்குப் பிறகு வெளியாகும்!திரிணமூல் காங். கட்சியினர் மீது சிஆர்பிஎஃப் தாக்குதல்! மமதா குற்றச்சாட்டுமேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது!மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம்! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்தது!
/

ரூ. 9.96 லட்சத்துக்கு விளைபொருள்கள் விற்பனை

கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வேளாண் விளை பொருள்கள் ரூ. 9 லட்சத்து 96 ஆயிரத்து 841க்கு திங்கள்கிழமை விற்பனையானது.

Updated On :3 செப்டம்பர் 2018, 7:43 pm

கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வேளாண் விளை பொருள்கள் ரூ. 9 லட்சத்து 96 ஆயிரத்து 841க்கு திங்கள்கிழமை விற்பனையானது.
கொடுமுடி சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து விவசாயிகள் 18,691 தேங்காய்களை விற்பனைக்குக் கொண்டு வந்தனர். இதில், தேங்காய் கிலோ அதிகபட்சமாக ரூ. 30.45 க்கும், குறைந்த பட்சமாக ரூ. 24.35 க்கும் ஏலம் போனது. அதேபோல, 193 மூட்டைகளில் கொண்டு வந்த  தேங்காய் கொப்பரை ரூ. 8,17,261க்கு விற்பனையானது. 
இதில், முதல் தரம் அதிகபட்சமாக ரூ. 108.89 க்கும், குறைந்தபட்சமாக ரூ. 102.69 க்கும்,  இரண்டாம் தரம் அதிகபட்சமாக ரூ. 98.09 க்கும், குறைந்தபட்சமாக ரூ. 62.19 க்கும் விற்பனை நடைபெற்றது. மொத்தம், ரூ. 9 லட்சத்து 96 ஆயிரத்து 841 க்கு விற்பனையானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.