பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

விவாகரத்தான மனைவியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

விவாகரத்தான மனைவியைக் கொலை செய்த வழக்கில் கட்டடத் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

Published On :30 ஜனவரி 2024, 10:12 pm IST

விவாகரத்தான மனைவியைக் கொலை செய்த வழக்கில் கட்டடத் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 
சத்தியமங்கலம் அருகே உள்ள உக்கரத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் (30). கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி நந்தினி (25). இவர்களுக்கு தரனேஷ் (6) என்ற ஆண் குழந்தை உள்ளது. தம்பதியினருக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்துப் பெற்றனர். நந்தினி தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.
 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 ஆம் தேதி அதே பகுதியில் உள்ள தோட்டத்தில் நந்தினி சோளத்தட்டு அறுத்துக் கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாகச் சென்ற ஸ்ரீதருக்கும், நந்தினிக்கும் தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த ஸ்ரீதர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் நந்தினியைக் குத்தி கொலை செய்ததாகக் கூறப்பட்டது.
இச்சம்பவம் குறித்து, கடத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை கோபி மூன்றாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மணி, நந்தினியைக் கொலை செய்த வழக்கில் ஸ்ரீதருக்கு ஆயுள் தண்டனை விதித்து புதன்கிழமை தீர்ப்பளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.